சிவாஜிகணேசனுக்கு நடந்ததுதான் சரோஜா தேவிக்கும்… விருது சர்ச்சை

 

சிவாஜிகணேசனுக்கு நடந்ததுதான் சரோஜா தேவிக்கும்… விருது சர்ச்சை

நடிப்புக்கே இலக்கணம், நடிகர்களுக்கு எல்லாம் திலகம் என்று பலராலும் போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது அங்கீகாரம் அளிக்கப்படாதது அவரது ரசிகர்களை இப்போதும் வருத்தப்பட வைக்கிறது. எத்தனையோ நடிகர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது போல் எத்துனையோ படங்களை நடித்துள்ள சிவாஜி கணேசனுக்கு வழங்கப்படாதது ஏன் ? என்ற சர்ச்சை இப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

சிவாஜிகணேசனுக்கு நடந்ததுதான் சரோஜா தேவிக்கும்… விருது சர்ச்சை

விருது கமிட்டியில் இருந்தவர் பெண் ஒருவர், சிவாஜி கணேசன் பெயரை சொல்லுவதற்கு பதிலாக எம்.ஜி.ஆர். பெயரை சொல்லிவிட்டார். அதனால்தான் அவருக்கு ரிக்‌ஷாக்காரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்று பேச்சு இருக்கிறது. மறைந்த பி.ஆர்.ஓ. பிதாமகன் கூட இப்படி பலரிடம் சொல்லி இருக்கிறார்.

அந்த வருடம் அப்படி தவறுதலாக நடந்ததாகவே கைத்துக்கொண்டாலும், அதற்கு முன்னும் பின்னும் சிவாஜி கணேசன் படங்கள் நடிக்கவில்லையா? இல்லை அந்த வருடத்தை தவிர வேறு எந்த வருடங்களிலும் சிவாஜிகணேசன் நல்ல படங்களே நடிக்கவில்லையா? என்று கேட்கின்றனர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். இதுவும் நியாயமாகத்தானே தெரிகிறது.

சிவாஜிகணேசனுக்கு நடந்ததுதான் சரோஜா தேவிக்கும்… விருது சர்ச்சை

சிவாஜிகணேசனுக்கு எப்படி தேசிய விருது வழங்கப்படாமல் இருப்பது சர்ச்சையாக இருக்கிறதோ அப்படித்தான் நடிகை சரோஜாதேவிக்கு கலைமாமனி விருது சர்ச்சையும் இருக்கிறது.

நண்டு,சிண்டுக்கெல்லாம் கலைமாமணி விருது கொடுத்த அரசு, இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சரோஜாதேவிக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறது என்கிறார்கள். ( 2019 -2020 ஆண்டுக்கான கலைமாமணிவிருது 42 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது) இப்போதாவது அறிவித்தார்களே. சிவாஜி மாதிரி கடைசிவரைக்கும் கொடுக்காமலே இல்லாமல் அந்திம காலத்திலாவது அவருக்கு அறிவித்திருக்கிறார்களே என்று சிலர் சந்தோசப்படுகிறார்கள்.