ஓபிஎஸ்க்கு ஜெ., எழுதிய கடிதம்: அம்பலப்படுத்திய ஸ்டாலின்

 

ஓபிஎஸ்க்கு ஜெ., எழுதிய கடிதம்: அம்பலப்படுத்திய ஸ்டாலின்

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையாக சாடினார்.

ஓபிஎஸ்க்கு ஜெ., எழுதிய கடிதம்: அம்பலப்படுத்திய ஸ்டாலின்

’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை. அவருக்கு இரண்டு முறை முதல்வர் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. அவருக்கும் உண்மையாக இல்லை. மூன்றாவது முறையாக அவருக்கு முதல்வர் பதவி கொடுத்தவர் சசிகலா. அவருக்கும் உண்மையாக இல்லை. அவரை எதிர்த்தே தனியாக போனார். பழனிச்சாமியிடம் சேர்ந்து துணை முதல்வர் ஆனார். இப்போது அவருக்கும் உண்மையாக இல்லை. தான் முதல்வர் ஆகவேண்டு என்று பழனிச்சாமியை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்’’என்றார்.

ஓபிஎஸ்க்கு ஜெ., எழுதிய கடிதம்: அம்பலப்படுத்திய ஸ்டாலின்

’’அயோத்திக்கு கிடைத்த பரதனைப்போல் தமிழகத்திற்கு கிடைத்த ஓபிஎஸ் என்று விளம்பரம் கொடுக்கிறார். ராமன், பரதன், அயோத்தி என்று சொன்னால்தான் பாஜகவுக்கு புரியும் என்பதால் இப்படி விளம்பரம் கொடுக்கிறார்’’என்ற ஸ்டாலின்,

’’பன்னீர்செல்வம் திறமை இல்லாதவர் என்பதை நாம் சொல்லவேண்டியது இல்லை. ஜெயலலிதாவே சொல்லி இருக்கிறார். 7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதா, அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த காலத்தில் ஏற்பட்டுள்ளநிதி நெருக்கடி குறித்து அதில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, ‘’முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்கும் நிதி முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளது என்பதை அறிந்து நான் கவலை அடைந்துள்ளேன்.

ஓபிஎஸ்க்கு ஜெ., எழுதிய கடிதம்: அம்பலப்படுத்திய ஸ்டாலின்

அனைத்து துறைகளும் மத்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தி கூடுதல் நிதி பெற்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அரசு செயலாளர்கள் மத்தியில் நிலவும் இந்த அரோக்கியமற்ற போக்கு குறித்து நான் மிகுந்த அதிருப்தி அடைகிறேன்’’ என்று எழுதி இருக்கிறார் என அம்பலப்படுத்தினார்.

நிர்வகத்திறமை அற்றவர் பன்னீர்செல்வம் என்பதற்கு இதைவிட வேறு சான்றுதேவையில்லை என்று ஸ்டாலின் சொன்னபோது, கட்சியின கைதட்டினர்.