ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை செயல்பட விடாமல் தொடர்ந்து இடையூறுகள் கொடுத்துவந்ததாக புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது அம்மாநில ஆட்சியாளர்கள் பதவி ஏற்றது முதல் போராட்டம் நடத்தி வந்தனர். சாலையில் படுத்து தூங்கியும் போராடி வந்தனர்.

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

அம்மாநிலம் மட்டுமல்லாது தமிழகத்து அரசியல் பிரமுகர்களும் கிரண்பேடிக்கு எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.

புதுச்சேரி ஆட்சி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைந்தது முதற்கொண்டு அந்த ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிர்கட்சிகள் முயற்சி செய்தால் அதை எதிர்கொண்டு முறியடித்து காட்ட முடியும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்டிருக்கிற ஆளுநர் கிரண்பேடி தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கற்பனையாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நாள்தோறும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

இந்நிலையில், கிரண்பேடியை பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு, தெலுங்கான மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமித்திருக்கிறது மத்திய பாஜக அரசு.

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

முதலில் கிரண்பேடி அடுத்து தமிழிசை மூலமும் அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் செய்ய நினைக்கிறது பாஜக என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

எழுவர் விடுதலையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுநரால் அது நிறைவேறாமல் இருக்கிறது.

ஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

இதனால்தான், ‘’ஆளுநர்களின் கொட்டத்தை கேள்வி கேட்காவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதே அமைக்கப்பட முடியாது போகும்.
தேர்தலின் ஆகப்பெரும் சவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜகவிற்கு சாதகமாக மாற்றியமைக்க ஆளுனர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதே. ஆளுனர் அற்ற மாநிலம் வேண்டும்’’ என்று உரக்க குரல் கொடுத்திருக்கிறார் மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.