ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

 

ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

திமுகவின் முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்தாலும் திருச்சியில் நடந்த இரண்டாவது மாநாட்டில்தான் தேர்தலில் திமுக போட்டியிடலாமா? வேண்டமா? என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1956ல் நடந்த அந்த வாக்கெடுப்பில் 90 சதவிகிதம் பேர் போட்டியிட வேண்டும் என்று வாக்களித்தனர். அதன்பின்னர் 1957ல் இருந்து தேர்தலில் போட்டியிட தொடங்கிய திமுக, 1967ல் ஆட்சியை பிடித்தது.

ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

இதன்பின்னர் சென்னை, கோவை, மதுரையில் மாநில மாநாடு நடந்திருந்தாலும் திருச்சியில் மாநில மாநாடு நடத்தினால் வெற்றி உறுதி என்று ஒரு செண்டிமெண்ட் உருவாகிவிட்டது. அதனால்தான் இதுவரைக்கும் நடந்த 10 திமுக மாநில மாநாடுகளில் 5 மாநில மாநாடுகள் திருச்சியில் நடந்திருக்கின்றன.

அதனால்தான் 11வது மாநில மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறது திமுக.

’மாநாடு மன்னன்’என்று திமுகவினரால் அழைக்கப்படும் கே.என்.நேருதான் இந்த மாநாட்டிற்கான பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். திருச்சி -சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் மாநாடு நடத்த 500 ஏக்கர் நிலத்தையும் பார்த்து பேசி முடித்து, அந்த இடத்தையும் மாநாடு நடத்துவதற்கு ஏற்ற வகையில் சுத்தமும் செய்துவிட்ட பின்னர், நாமக்கல்லில் நடந்த கிராம சபை கூட்ட பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு நேரே சிறுவகனூர் வந்து பார்வையிட்டார் ஸ்டாலின். அதன்பின்னர் மாநாட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன.

ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

இதில், இடையில் வந்து ஐபேக் டீம் மூக்கை நுழைத்ததால் பிரச்சனை எழுந்தது. ஐபேக்கின் இளம் நிர்வாகிகள் சிலர், மாநாட்டு மேடையை அப்படி அமைக்க வேண்டும் இப்படி அமைக்க வேண்டும், பிளக்ஸ், பேனர்கள் அங்கே வைக்க வேண்டும் இங்கே வைக்க வேண்டும் என்று சொல்லச்சொல்ல நேருவுக்கு முகம் சிவந்துவிட்டதாம். ’அண்ணனோட அரசியல் அனுபவம் கூட இருக்காது அவங்களுக்கு வயசு. மாநாடுன்னு சொல்லிட்டா போதும். அண்ணனை அடிச்சுக்க ஆளில்ல. அவருகிட்டயே வந்து ஐடியா கொடுத்தா சும்மா இருப்பாரா’என்று ஆதரவாளர்கள் சொல்லும்போதே தெரிகிறது. ஏதோ நடந்திருக்குது என்று.

ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

என்ன நடந்தது என்று விசாரித்தால், ‘’மாநாட்டு வேலைகளில் மூக்கை நுழைத்துக்கொண்டிருந்த அந்த ஐபேக் நிர்வாகிக்கு அண்ணன்(நேரு) தரப்பில் ஒருவர் போன் போட்டு பேசினார். பேசிக்கொண்டிருக்கும்போதே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி வார்த்தை தடித்தது. சட்டென்று, போனை பிடுங்கிய அண்ணன், சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்துட்டார். அதுல, பேயறைஞ்சது மாதிரி ஆச்சு அந்த பார்ட்டிக்கு. தலைமைக்கு போய் பத்த வச்சுட்டார். மாநாட்டு மேடை சம்பந்தமாக ஐபேக் கவனிக்கட்டும். நீங்க மற்ற வேலைகளை கவனிச்சுக்குங்க என்று தலைவர்(ஸ்டாலின்) சொல்லவும், சமாதானம் ஆன அண்ணன், மறுபடியும் மாநாட்டு வேலைகளை தொடங்கினார். அப்படி இருந்தும் ஐபேக் ஆட்கள் வந்து வந்து ஆலோசனைகளை சொல்லிக்கொண்டே இருந்ததால், கடுப்பான அண்ணன், தலைமைக்கு போன் போட்டு கத்திவிட்டு, மாநாட்டு வேலைகளை நிறுத்திட்டார்.

ஐபேக் – கே.என்.நேரு மோதல்: அறிவாலயத்தில் பஞ்சாயத்து

அண்ணனுக்கு வேண்டாத சிலர்தான், உட்கட்சி விவகாரத்தினை கையில் எடுத்துக்கொண்டு ஐபேக் டீம் போர்வைக்குள் வந்து இடைஞ்சல் தருகிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது. தடபுடலாக நடந்துவந்த வேலைகள் திடீர்னு நின்னுட்டதால அப்செட்டான தலைவர், அண்ணனையும், ஐபேக் ஆட்களையும் வச்சு பஞ்சாயத்து செய்ய அறிவாலயத்துக்கு கூப்பிட வேண்டியதா போச்சு’’ என்கிறார்கள்.

செய்யுறதை சிறப்ப செய்யணுங்கிறதுக்காகத்தான் மெனக்கெடுகிறோம். மற்றபடி உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை என்கிறார்கள் ஐபேக் குழுவினர். ஆனால், தனக்கு வேண்டாத சிலர்தான் ஐபேக் குழுவுடன் இணைந்து குடைச்சல் தருவதாகவே நினைக்கிறாராம். இதனால்தான் திட்டமிட்டபடி நடக்குமா திருச்சி திமுக மாநாடு? என்று சலசலப்பு எழுந்தது திமுகவில் என்கிறார்கள் திருச்சி உ.பி.க்கள்.