கட்சி பெண்கள் துஷ்பிரயோகம்; கனிமொழியின் செயல் வெட்கக்கேடானது.. காயத்ரி ரகுராம் கடும் கண்டனம்

 

கட்சி பெண்கள் துஷ்பிரயோகம்; கனிமொழியின் செயல் வெட்கக்கேடானது.. காயத்ரி ரகுராம் கடும் கண்டனம்

வி்டியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தினை முன்னெடுத்து வரும் கனிமொழி எம்.பி. அண்மையில் திருப்பூரில் அப்பிரச்சாரத்தினை மேற்கொண்டார். அப்போது ஒரு துணிக்கடைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றார்.

கட்சி பெண்கள் துஷ்பிரயோகம்; கனிமொழியின் செயல் வெட்கக்கேடானது.. காயத்ரி ரகுராம் கடும் கண்டனம்

அப்போது அவரை பெண் தொண்டர்கள் சூழ்ந்தனர். இதனால் டென்ஷன் ஆன மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ், தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை விரட்டினார். கனிமொழி அருகில் இருக்கும்போதும் அதை பொருட்படுத்தாமல் தகாத வார்த்தைகளால் செல்வராஜ் திட்டியது அங்கிருந்த பெண்களை முகம் சுழிக்க வைத்தது.

இதை பார்த்தும் கனிமொழி அலட்டிக்கொள்ளவே இல்லை. அதுகுறித்து எதுவும் கேட்கவும் இல்லை என்றபோது அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சி பெண்கள் துஷ்பிரயோகம்; கனிமொழியின் செயல் வெட்கக்கேடானது.. காயத்ரி ரகுராம் கடும் கண்டனம்

இந்த சம்பவத்தினை சிலர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது வைரலாகிறது. பலரும் கண்டத்தினை தெரிவித்து வருகிறார்கள்.

கட்சி பெண்கள் துஷ்பிரயோகம்; கனிமொழியின் செயல் வெட்கக்கேடானது.. காயத்ரி ரகுராம் கடும் கண்டனம்

’’இது என்ன கனிமொழி? வெட்கக்கேடானது. நீங்கள் பெண்களின் பிரிவு செயலாளர், ஆனால் உங்கள் கட்சி பெண்களை துஷ்பிரயோகம் செய்யப்படும் போது கூட நீங்கள் எதிர்வினையாற்ற மாட்டீர்களா?’’என்று கேள்வி எழுப்பி இருக்கிறார், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் காயத்ரி ரகுராம்.