‘அந்த நிதியில்தான் நாம் தமிழர் கட்சி இயங்குகிறது; ஆனால்….’ – சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்த ராஜீவ்காந்தி

‘அந்த நிதியில்தான் நாம் தமிழர் கட்சி இயங்குகிறது; ஆனால்….’ – சீமான் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டை வைத்த ராஜீவ்காந்தி

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்திக்கு, தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திமுக பிரச்சார கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பரபரப்பாக பங்கேற்று வரும் அவரிடம், ‘’நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேற என்ன காரணம்?’’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

‘அந்த நிதியில்தான் நாம் தமிழர் கட்சி இயங்குகிறது; ஆனால்….’ – சீமான் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டை வைத்த ராஜீவ்காந்தி

’நாம் தமிழர் கட்சி தொடங்கியபோது இருந்த நான்குபேரில் நானும் ஒருவன். நானும் மறைந்த வழக்கறிஞர் காமராஜும்தான் தோழர் மணிவண்ணன் வீட்டிற்கு சென்று கட்சி தொடங்குவது குறித்து பேசினோம். அதன்பின்னர்தான் சீமானிடம் பேசி கட்சி தொடங்கினோம். 2016 ம் ஆண்டு வரைக்கும் அந்த அமைப்போடு எவ்வித முரண்பாடும் இல்லாமல் பயணித்தேன். என்றைக்கு தெலுங்கருக்கும் தமிழருக்குமான யுத்தம் இது என்றும், வந்தேரி என்ற சொல் பயன்படுத்தியதாலும் , வீரத்தமிழர் முன்னணி என்ற ஒன்றை கொண்டுவந்து அதில் நாங்கள் எல்லோரும் சைவ மதம் என்று சொன்னதை அடுத்து மாற்று அரசியலை விதைக்க முடியாது என்பதும் தெரிந்ததும் மூன்று ஆண்டுகள் முரண்பாட்டுடன் தான் அங்கே இருந்தேன்’’ என்றார்.

‘அந்த நிதியில்தான் நாம் தமிழர் கட்சி இயங்குகிறது; ஆனால்….’ – சீமான் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டை வைத்த ராஜீவ்காந்தி

’’கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களும் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என்று சொன்னார் சீமான். ஆனால், அந்த 234 பேரில் 178 பேர் இப்போது கட்சியிலேயே இல்லை. அண்ணன் சீமானின் தான் என்கிற கர்வத்தினால்தான் அத்தனை பேரும் வெளியே போனார்கள்’’என்றார் உறுதியாக.

’’நாம் தமிழர் கட்சி இயங்குவதே, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அரேபிய நாடுகளுக்கு சென்ற சாதாரண கூலிதொழிலாளிகள் கொடுக்கும் நிதியில்தான். வெளிநாடுகளில் இருந்தும் நிதி வருகிறது. இதற்காகவே சவூதியில் செந்தமிழ்பாசறை இயங்குகிறது. அங்கிருந்து வரும் பணத்திற்கு இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட கணக்கு காட்டவில்லை சீமான்’’ என்று பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

’’நாம் தமிழர் குறிப்பிட்ட சாதியை ஆதரிக்கிறார்கள். கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். சாதியவாதமாக தமிழ்தேசியம் பார்க்கப்படுகிறது என்றால் தமிழ்தேசியம் என்கிற கருத்துருவாக்கம் திராவிடத்தின் நீட்சிதான் என்று நம்புகிற ஒரு ஆள் நான். தமிழ்தேசிய விதை என்பதே திராவிடத்தின் நீட்சிதான் என்று நம்புகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர்கள் 19 பேரில் 18 பேர் ஒரே சமூகத்தினர்தான். அப்படித்தான் அங்கே நிலைமை இருக்கிறது’’என்றவர்,

‘அந்த நிதியில்தான் நாம் தமிழர் கட்சி இயங்குகிறது; ஆனால்….’ – சீமான் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டை வைத்த ராஜீவ்காந்தி

’’உடுமலை சங்கர் படுகொலைக்கு அறிக்கை கொடுக்காதது ரெண்டே ரெண்டு கட்சிதான். ஒன்று பாஜக. இன்னொன்று நாம் தமிழர். இதை நான் வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறேன். சாதி குறித்தும், ஒடுக்கப்பட்டோர் நலன் குறித்தும், மத சிறூபாண்மை குறித்தும் எவ்விதம் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். அதிலிருந்துதான் முரண்பட்டு வெளியே வந்தேன்’’என்றார் அழுத்தமாக.