வெளிப்படையாக கேட்ட ஓபிஎஸ்; என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?

 

வெளிப்படையாக கேட்ட ஓபிஎஸ்; என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறித்தது பின்னர், எடப்பாடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கினார் பழனிச்சாமி. இதில், ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்றதுமே சலசலப்பு எழுந்தது.

வெளிப்படையாக கேட்ட ஓபிஎஸ்; என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில், முதல்வர் வேட்பாளரை அறிவித்தது போலவே, முதல்வர் வேட்பாளரின் முதல் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கி வைப்பதுதான் முறையாகும் என்ற பேச்சு எழுந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சியில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் பங்கேற்கும் வகையில் அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பிரச்சாரத்தினை மேற்கொண்டு வந்தாலும், ஓபிஎஸ் இன்னமும் பிரச்சாரத்தினை தொடங்காததால், ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரிடையே ஒற்றுமை இல்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், சென்னையில் நடந்த அரசு விழாவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரின் கைகளையும் உயர்த்தி பிடித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாக காட்டினர் பிரதமர் மோடி. ஆனாலும், ஓபிஎஸ் இன்னமும் பிரச்சார விசயத்தில் அமைதியாகவே இருப்பதால், கடந்த 15ம் தேதி தேனி மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில், ‘’எப்போது பிரச்சாரத்தை தொடங்கப்போகிறீர்கள்’’ என்றும் ஓபிஎஸ்சிடம் கேள்வி எழுப்பினர். அப்போதும் கூட அவர் எப்போது பிரச்சாரத்தினை தொடங்கப்போகிறேன் என்று சொல்லவில்லை ஓபிஎஸ்.

வெளிப்படையாக கேட்ட ஓபிஎஸ்; என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?

இதனால், ஓபிஎஸ்சை ஈபிஎஸ் அரவணைத்து செல்லாததால்தான் இந்த நிலைமை என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

’எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்த பிறகும் அவர் தன்னை மட்டுமே முன்னிறுத்தி மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டிய அவசியமே இல்லை. சக தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கு பதில் எடப்பாடி தன்னை முன்னிறுத்துவதில் குறியாக இருப்பது அதிமுகவை தேர்தலில் நிச்சயம் பாதிக்கும்.இந்த உண்மைகளை உணர்ந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறையை கடைப்பிடிப்பது அவருக்கும் நல்லது அதிமுகவுக்கும் நல்லது’ என்று துக்ளக் குருமூர்த்தியும் அறிவுறுத்தியிருக்கிறார்.

வெளிப்படையாக கேட்ட ஓபிஎஸ்; என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?

தேனியில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஓபிஎஸ் பேச்சிலும் கூட, தன்னை அரவணைத்து செல்லவில்லை என்பது மாதிரியே பேசியிருக்கிறார்.

‘’என்னை வைத்துக்கொண்டுதான் எல்லா வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்வார் அம்மா. உங்க எல்லாருக்கும் இதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்’’என்று ஓபிஎஸ் பேசியிப்பதை பார்த்தால்,

வேட்பாளர் தேர்வில் தான் ஓரங்கட்டப்பட்டு விடுவோமோ என்ற சந்தேகத்தில்தான், தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது மாதிரி, என்னை வைத்துக்கொண்டுதான் எல்லா வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்வார் அம்மா என்று சொல்கிறார் ஓபிஎஸ் என கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் முணுமுணுத்துக்கொண்டனர்.