‘அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’ – குஷ்பு நெகிழ்ச்சி

 

‘அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’ –  குஷ்பு  நெகிழ்ச்சி

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

புதுச்சேரி முதல்வர் நாராயசாமிக்கும் கிரண்பேடுக்கு மோதல் போக்கு வலுத்து வந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.

‘அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’ –  குஷ்பு  நெகிழ்ச்சி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மக்கள் நல திட்டங்களை செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார் கிரண்பேடி என்று தொடர் குற்றச்சாட்டும் அது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

ஆனால், அரசியலமைப்புக்கு உட்பட்டு தார்மீக பொறுப்புகளை உணர்ந்து, அப்பழுக்கற்று, என் கடமையை செய்தேன் என்று கிரண்பேடி விளக்கம் அளித்திருக்கிறார்.

‘அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’ –  குஷ்பு  நெகிழ்ச்சி

கிரண்பேடிக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமித்திருக்கிறது மத்திய அரசு.

தமிழக பாஜக தலைவராக இருந்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டும், புதுச்சேரி மாநிலத்தில் பாஜக வளர பாடுபட்டும் வந்தவர் தமிழிசை. அவரே இப்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வருவதை பாஜகவினர் வரவேற்று வருகின்றனர்.

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, ‘’அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’’என்று நெகிழ்ச்சியும் குறிப்பிட்டிருக்கிறார்.