பாஜகவின் போக்கு: சீமான் பேரதிர்ச்சி

 

பாஜகவின் போக்கு:  சீமான் பேரதிர்ச்சி

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துப்பரப்புரை செய்ததால் பெங்களூரு சூழியல் செயற்பாட்டாளரும், கல்லூரி மாணவியுமான 21 வயதே நிரம்பிய தங்கை திஷாரவி கொடுஞ்சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன் என்கிறார் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பாஜகவின் போக்கு:  சீமான் பேரதிர்ச்சி

சர்வதேச சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க், டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தின. விவசாயிகள் எப்படி போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும், போராட்டத்திற்கு எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த டூல்கிட்டினை கிரேட்டா ஷேர் செய்டிருந்தார். இதனால் உடனடியாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரேட்ட தன்பெர்க்கின் பதிவினை அகற்றினர்.

அந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பவர்களை பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது, பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளருமான திஷாரவி(22) கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்காக வாதாட எந்த வக்கீலும் ஆஜராகவில்லை. அவருக்கு அவராகவே வாதாடவேண்டிய நிலையில், நான் எந்த டூல்கிட்டையும் உருவாக்க வில்லை. கிரேட்டா தன்பெர்க்கின் டுவிட்டில் இரண்டு வரிகளை மட்டும் மாற்றி பதிவிட்டேன். வேறு எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு கண்ணீர் விட்டவரை, ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜகவின் போக்கு:  சீமான் பேரதிர்ச்சி

சிறையிலடைக்கப்பட்ட திஷாரவியை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் கட்சி உள்பட இந்தியாவெங்கிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் திஷாரவியின் கைதுக்கு கண்டம் எழுப்பிவருகிறார்கள்.

இந்நிலையில், சீமானும் திஷாரவி சிறையிலடைக்கப்பட்டது அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததை பதிவு செய்திருக்கிறார்.

அவர் மேலும், ’’போராடினாலோ, மாற்றுக்கருத்தை முன்வைத்தாலோ அவர்களைச் சமூக விரோதிகளெனவும், தேசத்துரோகிகளெனவும் விளித்து, அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது’’என்கிறார்.

‘’அரசியலமைப்புச்சாசனம் வழியாக இந்நாடு வழங்கியிருக்கும் கருத்துச்சுதந்திரம் எனும் அடிப்படை உரிமைக்கெதிரான இக்கோரத்தாக்குதல் பாசிசவெறி பிடித்த பாஜக அரசின் அரசப்பயங்கரவாதச் செயலாகும்’’என்கிறார்.