முதல் நாள் முதல் கையெழுத்தும் ராமதாசின் கோரிக்கையும்

 

முதல் நாள் முதல் கையெழுத்தும் ராமதாசின் கோரிக்கையும்

இந்த தேர்தலில் இட ஒதுக்கீட்டு பிரச்சனையை தீவிரமாக முன்னெடுத்திருக்கும் பாமக, கடந்த தேர்தல்களில் பூரண மதுவிலக்கினை தீவிரமாக முன்னெடுத்துச்சென்றது.

முதல் நாள் முதல் கையெழுத்தும் ராமதாசின் கோரிக்கையும்

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் முன்னிருத்தப்பட்டபோது, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றும், ‘முதல் நாள் முதல் கையெழுத்து..பூரண மதுவிலக்கு’ என்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

பூரண மதுவிலக்கினை வலியுறுத்தி பாமக பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்துச்சென்றது.

இந்நிலையில், பூரண மதுவிலக்கு தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம், தமிழகத்தின் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என்று வேதனையுடன் தெரிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவிறுத்தியது.

முதல் நாள் முதல் கையெழுத்தும் ராமதாசின் கோரிக்கையும்

மதுபான விற்பனை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ருபாயினை வருமானமாக ஈட்டும் அரசு, பொது சுகாதாரத்திற்காக 90 ஆயிரம் கோடி ரூபாயினை செலவிடும் அரசு, இந்த யோசனைகளை அரசு கவனிக்குமா? என்றும் கவலையுடன் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் , ’’தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும்’’என்று வலியுறுத்தியுள்ளார்.