சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால்வியாபாரி!

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால்வியாபாரி!

விவசாயமும், பால் வியாபாரமும் செய்து வரும் ஜனார்த்தன் போயிர் மகாராஷ்டிராவின் பிவாண்டி நகரத்தின் கவனத்தையே தன் பக்கம் திருப்பி இருக்கிறார். 30 கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியிருப்பதுதான் அதற்கு காரணம்.

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால்வியாபாரி!

இதற்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிபேடு, பைலட் அறை அமைத்திருக்கிறார்.

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால்வியாபாரி!

விவசாயம், பால் வியாபாரத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருவதால் தொழில் சம்பந்தமாக அடிக்கடி குஜராத், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால், பயண நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஹெலிகாப்டர் வாங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஜனார்த்தன் போயிர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால்வியாபாரி!

விவசாயமும் பால்வியாபாரம்தான் தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியது என்று பெருமையுடன் சொல்கிறார் ஜனார்த்தன். ஒரு விவசாயி இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது கண்டு பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.