‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!

 

‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தனியாக அழைத்துப் பேசியதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக். அந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுகவிலும் தமிழகத்திலும் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி வளர்ந்திருப்பதை மோடி அனைவருக்கும் உணர்த்தி சென்று விட்டார் என்பதே அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.

‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!

’’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சில குழப்பங்களைத் தொடர்ந்து, கட்சியும் ஆட்சியும் கரை சேருமா என்கிற அளவுக்கு சிலர் பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ’இந்த ஆட்சி இன்னும் ஒரு மாதம்தான்… இரண்டு மாதம்தான்’ என ஏலம் விட்டுக் கொண்டிருந்தார். இதையே இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா எப்படி காலத்தால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவினராலும் தமிழக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாரோ அதேபோன்ற உயரத்தை இன்று எடப்பாடி எட்டியுள்ளார். இதில் சாமான்ய மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடியை ஏற்றுக் கொண்டது பெரிய விஷயமில்லை. இன்றைய ஆண்ட்ராய்டு தலைமுறையினரையும் ’ட்விங்கிள் ட்விங்கள் லிட்டில் ஸ்டார்… எடப்பாடி எங்கள் சூப்பர் ஸ்டார்’ என பேனர் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு ஈர்த்ததுதான் எங்களையே ஆச்சர்யப்படுத்துகிறது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய எம்ஜிஆர் காலத்து சீனியர் அரசியல் விமர்சகர் ஒருவர், ’’உண்மைதான்… இன்றைய துரோக அரசியலில் எடப்பாடி தாக்குப் பிடிப்பாரா என எல்லோரும் ஆரம்பத்தில் சற்று சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள். ஆனால், அதிருப்தியாளர்களை எல்லாம் அரவணைத்து, தனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகளையும் முறியடித்து கட்சியையும் ஆட்சியையும் சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றிவிட்டார். இவை எல்லாவற்றிலுமே எடப்பாடியின் தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியும் பளிச்சிட்டதை அதிமுகவினர் மட்டுமல்லாது, மற்ற கட்சியினருமே ஒப்புக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


இதன் வெளிப்பாடுதான், அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் 15 நிமிடங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்துப் பேசியது. இதை எடப்பாடியின் ஆளுமை மற்றும் திறமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பெருமையாகவும் கருதலாம்’’ என்கிறார்.

‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!

எடப்பாடிக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் ஏக குஷி. ’எங்க தல… எங்க தல எடப்பாடி’’ என ஏக உற்சாகமாக பேசும் அவர்கள், அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான் என ஏக நம்பிக்கையுடன் வளைய வருகிறார்கள்.

மத்திய மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த அமைச்சரிடம் நாம் பேசியபோது, ‘’சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா. இவரது விடுதலையை மையமாக வைத்து அதிமுகவில் பிளவு ஏற்படலாம் என சிலர் எதிர்பார்த்தனர். அவர் அங்கே செல்வார்… இவர் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், எல்லாமே ஒரே நாள் கூத்தாக புஸ்ஸாகிப் போனதுதான் மிச்சம். ஜெயலலிதா காலத்தைப் போல அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் திகழ்கிறது. அனைத்து தரப்பினரும் பயனடையும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி ஆட்சி நிர்வாகத்திலும் அசத்துகிறார்.

‘எங்க தல எடப்பாடி’ – ஏக குஷியில் அதிமுக!


இதனால்தான் முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பாக எடப்பாடி ஒருமனதாக முன்னிறுத்தப்பட்டது மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார். இதற்கு மோடியின் சமீபத்திய அங்கீகாரம் ஒன்றே போதும். எடப்பாடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆட்சியும் எங்கள் ஆட்சிதான். இதை நாங்கள் சும்மா சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு வாரம் இருமுறை ஏடு நடத்திய கருத்துக்கணிப்பிலும் வருகிற தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. மக்களும் அந்த மனநிலையில்தான் உள்ளனர்’’ என்கிறார் ஒரே போடாக!