ஸ்டாலின் -கனலரசன் சந்திப்பை தடுக்க ராமதாஸ் செய்த சூழ்ச்சி; மீனாட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்டாலின் -கனலரசன் சந்திப்பை தடுக்க ராமதாஸ் செய்த சூழ்ச்சி;  மீனாட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அரியலூர் வந்த ஸ்டாலினை கனலரசன் சந்திக்க இருந்ததாகவும், இதனை தடுக்கவே ராமதாஸ் சூழ்ச்சி செய்து சிறையில் அடைத்திருக்கிறார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைபோகிறார் என்று காடுவெட்டி குருவின் தங்கை மீனாட்சி புலம்பி வருகிறார்.

ஸ்டாலின் -கனலரசன் சந்திப்பை தடுக்க ராமதாஸ் செய்த சூழ்ச்சி;  மீனாட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

குருவின் மகன் கனலரசன், மஞ்சள் படை அமைப்பின் சார்பில் அண்மையில் ஜெயங்கொண்டத்தில் கொடியே ஏற்றியபோது, பாமக நிர்வாகிகள் சிலர் கொடி கம்பத்தினை உடைத்தனர். இதுகுறித்து மீன் சுருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் -கனலரசன் சந்திப்பை தடுக்க ராமதாஸ் செய்த சூழ்ச்சி;  மீனாட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

அதன்படி நேற்று மீன்சுருட்டி காவல்நிலைய எஸ்.ஐ.மலைச்சாமி, நாங்க பாதுகாப்பு தருகிறோம். வந்து கொடியேற்றுங்க என்று சொல்லி கனலரசனை அழைத்து சென்றிருக்கிறார். கொடியேற்ற சென்ற இடத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், கனலரசனையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து ஜெயங்கொண்டம் மண்டமத்தில் தங்க வைத்தூள்ளனர். பின்னர், மாலை 6 மணிக்குமேல் கடந்த ஆண்டு நடந்த மோதல் வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.

ஸ்டாலின் -கனலரசன் சந்திப்பை தடுக்க ராமதாஸ் செய்த சூழ்ச்சி;  மீனாட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

இதுகுறித்து குருவின் சகோதரி மீனாட்சி, ‘’அண்ணன் இறந்தது முதல் எங்க குடும்பத்திற்கு ராமதாஸ் நிறைய சித்திரவதைகள் செய்கிறார். முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அதற்கெல்லாம் துணைபோகிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக அரியலூர் வரும் ஸ்டாலினை கனலரசன் சந்திக்க இருந்தான். அதை தடுக்கவே ராமதாஸ் சூழ்ச்சி செய்து சிறையில் அடைத்துவிட்டார்’’ என்று ஊடகங்களில் குற்றம்சாட்டி வருகிறார்.