அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

விடுதலையான பின்னர் பெங்களூருவில் இருந்து சென்னை வரைக்கும் வழிநெடுகிலும் ஆதரவாளர்களின் அமோக வரவேற்பில் 23 மணி நேரம் காரில் பயணம் செய்தார் சசிகலா. இந்த வரவேற்புக்காக அமமுக 192 கோடி செலவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

சசிகலாவுக்கு நேர்ந்த இந்த தடபுடலான வரவேற்பு பலரையும் முகம் சுழிக்க வைத்தது. ’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது’’என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சூசகமாக சாடினார்.

துக்ளக் குருமூர்த்தியும் சசிகலாவின் தடபுடல் வரவேற்பினை கடுமையாக சாடியிருக்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

’’ ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்து அதிமுகவை பின்னால் இருந்து இயக்கும் வாய்ப்பும் செல்வாக்கும் பெற்ற சசிகலா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்து ஆரம்பகாலத்தில் பிடிபட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் 2017 சிறை சென்றார். சிறை சென்ற அவர் சென்ற வாரம் ரத கஜ துரக பதாதிகள் சகிதம் வெளிவந்தார். ஒரு காலத்தில் சுப்பிரமணியன் சுவாமி ’மாபியா’ என்று வர்ணித்த மன்னார்குடி குடும்பத் தலைவியான அவருக்கு பெங்களூர் டு சென்னை சாலையில் தமிழக எல்லையில் இருந்து அவரது கட்சி அளித்த வரவேற்பும் , அந்த கேவலத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும், எடப்பாடி அரசு அதை முக்கிய படுத்தியது போல எடுத்த அர்த்தமற்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து தாழ்ந்து வரும் தமிழக அரசியலில் இதுவரை காணாத தாழ்வான தருணம்’’என்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

இதுகுறித்த அவரது கட்டுரையில் மேலும், ‘’ஊழல் செய்தவர்களை பல்லாயிரம் பேர் மாலையிட்டு வரவேற்று அவர்களின் ஊழல் கறையை மறைக்க முயற்சி தமிழகத்தில் 2ஜி ஊழல் வாதிகள் ராசா கனிமொழி இருவருக்கும் கொடுத்த வரவேற்பில் இருந்து துவங்கியது. அந்த அவல முயற்சியின் உச்சகட்டம் தான் பதவியில் இல்லாமல் இருந்தே ஊழலில் சாதனை படைத்த சசிகலாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொடுத்த வரவேற்பு.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

ஊழல் செய்து சிறை சென்றவர்களை தேச விடுதலைக்கு சிறை சென்றவர்களை அழைப்பது போல் தியாகி என்றும் தலைவர் தலைவி என்றும் கருதுவது அரசியலுக்கு தியாகி யார்? தலைவர் யார்? என்பதை விளக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது’’ என்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

’’ஊழல்வாதிகள் போன்றவர்களை தியாகி என்று துணிவுடன் கூறும் அவலம் நிகழ்ந்ததற்கு காரணம் நமது கல்வியும் அரசியலும் தான் காந்தி நேரு திலகர் காமராஜர் பற்றி பலர் கேள்விப் பட்டிருந்தாலும் அவர்களின் தியாகங்களை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது . ஊரை அடித்து உலையில் கொட்டி கொள்ளையடித்தவர்கள் தான் தியாகிகள். இதற்கு தமிழகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்’’என்றும், ’’அடிமைகள் காலில் விழுவதால் ஒருவர் தலைவராக முடியாது’’ என்றும் கடுமை காட்டியிருக்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

மூத்த பத்திரிகையாளர் மாலனும், ’’ஊர் நெடுக ஒட்டப்பட்டிருக்கும் உங்கள் கட்சித் தொண்டர்களின் சுவரொட்டிகள் சசிகலாவை தியாகத் தலைவி என்று அழைக்கின்றனர். அவர் செய்த தியாகம் என்ன? எதற்காக தியாகம் செய்தார்? நாட்டின் விடுதலைக்காகவா?, மனித உரிமைகளுக்காகவா?, ஜெயலலிதா என்ற தனி ஒருவருக்காக தனது குடும்பத்தை துறந்து வாழ்ந்தார் என்று ஜோக் அடித்து விடாதீர்கள்’’என்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

’’ஜெயலலிதாவுடன் சசிகலா வாழ்ந்த காலத்தில் அவரது குடும்பம் மொத்தமும் அதிகாரத்தையும் செல்வத்தையும் செல்வாக்கையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ அனுபவித்தார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். சசிகலா செய்த தியாகம் என்ன? அவர் எதை இழந்தார் வீடியோ கடை அதிபராக ஜெயலலிதாவிடம் வந்த அவருடைய, அவரது உறவினர்களின் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 2,000 கோடி என்று செய்திகள் சொல்கின்றன. சசிகலாவை உங்கள் கட்சித் தொண்டர்கள் தியாகத் தலைவி என்று அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அப்படி அழைப்பது தியாகத்தை கேலி செய்வதாகும். தியாகம் என்பது ஒரு லட்சியத்திற்காக அல்லது பிறர் நலனுக்காக தன் சுகங்களை விரும்பி இழப்பது’’ என்று சசிகலாவையும் டிடிடிதினகரனையும் விளாசி எடுத்திருக்கிறார்.

அந்தர் பல்டி அடித்த குருமூர்த்தி: சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் விளாசல்

சசிகலாவை சேர்த்துக்கொள்ளாவிட்டால், அமமுகவை இணைத்துக் கொள்ளாவிட்டால் 50 இடங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று எச்சரித்த குருமூர்த்தி, பிரதமரின் சென்னை விசிட்டுக்கு பின்னர் இப்படி அந்தர் பல்டி அடித்திருக்கிறார். சசிகலாவையும், டிடிவி தினகரனையும் விளாசி எடுத்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.