திஷா ரவிக்கு பாகிஸ்தான் பிரதமரின் பிடிஐ ஆதரவு; கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் மூலம் ஆதரவு திரட்டுவது வெட்கக்கேடாது என விளாசல்

திஷா ரவிக்கு பாகிஸ்தான் பிரதமரின் பிடிஐ  ஆதரவு; கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் மூலம்  ஆதரவு திரட்டுவது  வெட்கக்கேடாது என விளாசல்

டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம் பெற்றபோது , இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திஷா ரவிக்கு பாகிஸ்தான் பிரதமரின் பிடிஐ  ஆதரவு; கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் மூலம்  ஆதரவு திரட்டுவது  வெட்கக்கேடாது என விளாசல்

இந்திய பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் வெளிநாட்டவர் இதில் தலையிட வேண்டாம் என்று சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், அக்‌ஷய்குமார், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் குரல் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் அழுத்தத்தால்தான் இவ்வாறு குரல் கொடுத்து வந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்தன.

விவசாயிகள் எப்படி போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும், போராட்டத்திற்கு எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த டூல்கிட்டினை சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் ஷேர் செய்டிருந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரேட்ட தன்பெர்க்கின் பதிவினை அகற்றினர்.

திஷா ரவிக்கு பாகிஸ்தான் பிரதமரின் பிடிஐ  ஆதரவு; கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் மூலம்  ஆதரவு திரட்டுவது  வெட்கக்கேடாது என விளாசல்

அந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பவர்களை பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோதுதான், பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவி திஷாரவி சிக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளரான திஷா ரவியை கைது செய்து, சிறையிலும் அடைத்துவிட்டனர்.

திஷா ரவியின் கைதுக்கு ராகுல்காந்தி, ப.சிதம்பரம், அரவிந்த் கெஜ்ரிவால், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

திஷா ரவிக்கு பாகிஸ்தான் பிரதமரின் பிடிஐ  ஆதரவு; கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் மூலம்  ஆதரவு திரட்டுவது  வெட்கக்கேடாது என விளாசல்

ஆனால், பாகிஸ்தானின் ஆளுங்கட்சி திஷாரவிக்கு ஆதரவுதெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘’மோடி ஆட்சி, தங்கள் அரசுக்கு எதிரான அனைத்து குரல்களையும் மவுனமாக்குகின்றது’’ என்றும், ‘’கிரிக்கெட் வீரர்களையும், சினிமா பிரபலங்களையும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவது வெட்கக்கேடாது’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமரின்கட்சி தெரிவித்திருப்பதால் இது சர்வதே சதிதானா? என்ற கோணத்தில் சலசலப்புஏற்பட்டிருக்கிறது.