சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் மோடி

 

சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் மோடி

சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் பிரதமர் மோடி.

சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் மோடி

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு விட்ட பிரதமர் 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்லும் மோடி. அங்கிருந்து கார் மூலமாக செண்ட்ரல் அருகே இருக்கும் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்கிறார்.

சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் மோடி

காலை 11.45 மணிக்கு காணொளி மூலமாக திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

4486 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.

வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்
மேலும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது புதிய பாதை, விழுப்புரம்- கடலூர் – மயிலாடுதுரை- தஞ்சாவூர், மயிலாடுதுரை -திருவாரூர் மின்மயமான ரயில் பாதைகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அர்ஜூன் போர் பீரங்கி(எம்.கே-1ஏ) வண்டியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார் மோடி.

இந்த அரசு விழாவுக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்த இருகிறார் மோடி. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.