எங்களின் பேரடையாளத்தை அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான அறச்சீற்றமே… சு.வெங்கடேசன்

 

எங்களின் பேரடையாளத்தை அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான அறச்சீற்றமே… சு.வெங்கடேசன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று தொடங்கியது. கீழடி ஏழாம் கட்ட அகழாய்வினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

எங்களின் பேரடையாளத்தை அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான அறச்சீற்றமே… சு.வெங்கடேசன்

தமிழக தொல்லியல்துறை சார்பில் 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. கீழடி மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற இருக்கின்றன.

கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வரும் நிலையில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள், மனித எலும்பு கூடு, முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டது. 6கட்ட அகழாய்வு பணிகளுக்கு பின்னர் பலரின் எதிர்பார்புகளுடன் 7 ஆம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து, ’’கீழடியில் இன்று 7 ஆம் கட்ட அகழாய்வு தொடங்குகிறது. 6 ஆண்டுகளாக கீழடியை பெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் பேரடையாளத்தை அழிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான அறச்சீற்றமே கீழடி அகழாய்வு இயக்கம். எத்தனை தடை வரினும் அவற்றினை உடைத்து முன்னெடுத்து செல்வோம்’’ என்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.