மோடியுடன் ஒரே காரில் செல்லும் ஈபிஎஸ்; ஆலோசனை நடத்த தயாராகும் ‘க்ரீன் ரூம்’

மோடியுடன் ஒரே காரில் செல்லும் ஈபிஎஸ்; ஆலோசனை நடத்த தயாராகும்  ‘க்ரீன் ரூம்’

காட்டு மிருகம் மாதிரி ஏன் இப்படி கத்துகிறார் என்று டிடிவி தினகரன் சொல்லும் அளவுக்கு சசிகலா விடுதலையானதில் இருந்து சென்னை வந்தது வரைக்கும் கடுமையான தடைகளையும், கண்டனங்களையும் எழுப்பி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா விவகாரத்தில் எடப்பாடியார் இப்படி ஜெட் வேகம் எடுக்க, ஆமை வேகம் கூட எடுக்காமல், எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் ஓபிஎஸ்.

மோடியுடன் ஒரே காரில் செல்லும் ஈபிஎஸ்; ஆலோசனை நடத்த தயாராகும்  ‘க்ரீன் ரூம்’

ஓபிஎஸ்சின் இந்த மவுனம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் மூன்று மணி நேர பயணமாக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். அவரது சென்னை பயணத்தின்போது சசிகலா விவகாரம் குறித்தும், கூட்டணி குறித்தும் மோடியுடன் ஆலோசிக்க இருக்கிறார்கள் ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும்.

மோடியுடன் ஒரே காரில் செல்லும் ஈபிஎஸ்; ஆலோசனை நடத்த தயாராகும்  ‘க்ரீன் ரூம்’

இருக்கும் மூன்று மணி நேரத்தில் அரசு திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றத்தான் சரியாக இருக்கும். இதில் எங்கே ஈபிஎஸ் -ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்த முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்காகத்தான், சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐ.என்.எஸ். விமான படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக நேரு ஸ்டேடியம் செல்கிறார்.

மோடியுடன் ஒரே காரில் செல்லும் ஈபிஎஸ்; ஆலோசனை நடத்த தயாராகும்  ‘க்ரீன் ரூம்’

அப்போது, பிரதமருடன் ஈபிஎஸ்சும் ஒரே காரில் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும், நேரு ஸ்டேடியத்தில் விழாவில் பங்கேற்றுவிட்டு, அங்கிருக்கும் க்ரீன் ரூமில் ஈபிஎஸ் -ஓபிஎஸ்சுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் தகவல்.