ஒடிடி விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உஷாராஜேந்தர் கோரிக்கை

 

ஒடிடி விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உஷாராஜேந்தர்  கோரிக்கை

திரையரங்குகளில் படங்களை திரையிட வேண்டுமானால் 30 நாட்களுக்கு பிறகுதான் ஒடிடியில் ஒளிபரப்பப்படும் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கப்படவேண்டும் என்கிற திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமற்றது . சில ஆண்டுகளுக்கு முன்பு Print Control System அமுலில் இருந்த நேரத்தில் , சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் ஒரு படம் திரையிடப்பட்டால் அந்தப்படம் வடபழனி ஏரியாவில் இருக்கும் திரையரங்குகளிலோ அல்லது அருகிலுள்ள காசி திரையரங்கிலோ திரையிடப்படமாட்டாது .

ஒடிடி விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உஷாராஜேந்தர்  கோரிக்கை

ஆனால் மாறிவரும் தற்போதைய சூழலில் அனைத்து திரையரங்கத்திலும் ஒரே படத்தை ஒரே நேரத்தில் சுதந்திரமாக திரையிட்டு வசூலை திரையரங்க உரிமையாளர்கள் பிரித்து கொள்வது போல , தயாரிப்பாளர்களுக்கும் வியாபார சுதந்திரம் உண்டு என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷாராஜேந்தர் .

மேலும், ‘’திரையரங்கத்தில் படம் திரையிடப்படும் அதே நாளில் தயாரிப்பாளர் விருப்பப்பட்டால் OTT- லும் படத்தை வெளியிட்டு கொள்ளலாம் . இதில் தலையிடுவதற்கோ , உத்தரவாத கடிதம் கேட்பதற்கோ எந்த சங்கத்திற்கும் தார்மீக உரிமையில்லை . 30 நாட்கள் கழித்துதான் OT ல் திரைப்படம் வெளியாகும் என்ற உத்தரவாத கடிதம் கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் , குறிப்பிட்ட அந்த படத்தை 30 நாட்கள் தொடர்ச்சியாக எங்கள் திரையரங்குகளில் திரையிடுவோம் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கத் தயாரா ?’’என்று கேட்கிறார்.

’’திரையரங்க உரிமையாளர்கள் சில படங்களை மூன்றே நாட்களிலும் , சில படங்களை ஒரு வாரத்திலும் , சில படங்களை இரண்டு வாரங்களிலும் திரையரங்கை விட்டு தூக்கி விடுகிறீர்கள் . பெரும்பாலான படங்களை இரண்டு வாரங்களுக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் விரும்புவதில்லை . நிலைமை அப்படி இருக்க தயாரிப்பாளர்கள் OTT யில் வெளியிடுவதற்காக ஏன் 30 நாட்கள் காத்திருக்கவேண்டும் ?

ஒடிடி விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உஷாராஜேந்தர்  கோரிக்கை

எதற்காக எங்களை 30 நாட்கள் கழித்துதான் வெளியிட வேண்டும் என்று கட்டாய படுத்துகிறீர்கள் ? ஒரு படத்தை திரையரங்கிலிருந்து தூக்க உங்களுக்கு உரிமை இருப்பது போல , OTT ல் தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில் திரையிட அவருக்கு உரிமை இல்லையா .. ? திரையரங்க உரிமையாளர்கள் MG அடிப்படையில் படத்தை திரையிடுவதாக இருந்தால் மற்ற விஷயத்தில் நிபந்தனை விதிக்கலாம் . அதை விடுத்து , சதவீத அடிப்படையில் படத்தை திரையிடும் உங்களுக்கு நங்கள் ஏன் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் .. ? இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்க உரிமையாளர்கள் என முத்தரப்பும் ஆகியோர் கலந்து பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும்’’என்று தெரிவித்திருக்கிறார்.