’’அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா?’’-மூத்த நிர்வாகியின் ஆடியோவால் திமுகவில் சலசலப்பு

’’அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா?’’-மூத்த  நிர்வாகியின் ஆடியோவால் திமுகவில் சலசலப்பு

’’45 வருசமா கட்சியில இருக்குறேன். ஆனா, என் பெயரை சொன்னா எவனும் கை தட்ட மாட்டேங்குறான். வேலு மகன் கம்பன் இந்த கட்சியில வந்து ஒண்ணும் புடுங்கல. அவன் பேரைச்சொன்னா மட்டும் கை தட்டுறான்.

’’அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா?’’-மூத்த  நிர்வாகியின் ஆடியோவால் திமுகவில் சலசலப்பு

வேலுவுக்கு காலேஜ், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, பைனான்ஸ் வச்சிருக்கிறர். இவ்வளவு தொழில் இருக்கும்போது அதுல போய் அவர் பையன் வளர்ந்துக்க வேண்டியதானே. ஏன் கட்சிக்குள்ள வந்து அடுத்தவன் பிழைப்பை கெடுக்கணும்? அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா? வேலுவுக்கு மட்டுமில்ல.. கலைஞருக்கும் தலைவருக்கும் சேர்த்துதான் சொல்றேன்..’’என்று ஆடியோ திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

’’அப்பன், புள்ளதான் பதவிக்கு வரணுமா?’’-மூத்த  நிர்வாகியின் ஆடியோவால் திமுகவில் சலசலப்பு

திருவண்ணாமலை மாவட்டம் திமுக சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தானிப்பாடி கட்சி நிர்வாகியிடம் செல்போனில் தனது குமுறலை வெளிப்படுத்தியதுதான் ஆடியோவாக வந்த திமுகவில் பரபரபை ஏற்படுத்திவிட்டது.

சும்மா விடுமா தலைமை? அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.