நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

 

நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

’’அண்ணன் சூர்யா வீடு திரும்பியிருக்கிறார்’’ என்று நடிகர் சூர்யா கொரோனாவிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியதை தெரிவித்திருக்கிறார் அவரது தம்பி நடிகர் கார்த்தி.

நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார் ஆனாலும் இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவிறுத்தியிருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

சூர்யா கொரோனவில் இருந்து குணமடைந்து மீண்டும் சிங்கம் போல் திரையில் தோன்ற மானாமதுரை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மானாமதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ வழி விடுமுருகன் ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை செய்தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடியில் அமைந்துள்ள கடும்பாடி சின்னமன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

நடிகர் சூர்யா டிஸ்சார்ஜ்

இதனால்தான், சூர்யா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.