புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மக்கள் நல்வாழ்வு குடும்பநல அமைச்சகம் பதில் அளித்திருக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

இதை தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நகர்புற கிராமபுற புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது உட்பட நடவடிக்கைகளை கொண்ட புற்றுநோயை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களவையில் பேசியபோது, புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து கேள்வி எழுப்பினார் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக இதற்கு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோதிமணி என்று வலியுறுத்தினார்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், முதல் நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய மார்பகப் புற்றுநோய் சில நோய்கள் குறித்த விழிப்புணர்வு செய்வது புற்றுநோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட சில நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை களைய மாவட்டம் மற்றும் கிராமப்புற மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவது முதலான நடவடிக்கைகளை கொண்ட புற்றுநோய்க்கு எதிரான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வு குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில், பெண்களிடையே புற்றுநோய் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 7,12, 858 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து தேசிய சுகாதார திட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.