முதல்வர் சொன்ன விசுவாசமும் ஓபிஎஸ்சின் சூசகமும்

 

முதல்வர் சொன்ன விசுவாசமும்  ஓபிஎஸ்சின் சூசகமும்

’விசுவாசம்’ என்று பேசி ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் சொன்ன விசுவாசமும்  ஓபிஎஸ்சின் சூசகமும்

கட்சிக்கு விசுவாசமா இருங்கள் என்று ராணிப்பேட்டையில் தொண்டர்களிடத்தில் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து, ‘’விசுவாசமா? ஆமாம், “சின்னம்மா”விடம் இவர் காட்டும் விசுவாசம்!’’என்று அரசியல் விமர்சகர் அருணன் கமெண்ட் அடிக்கிறார்.

முதல்வர் சொன்ன விசுவாசமும்  ஓபிஎஸ்சின் சூசகமும்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி விசுவாசமாக இல்லை என்ற பேச்சு வந்துவிட்ட இந்த சூழலில், ஜெயலலிதாவுக்கு தான் விசுவாசமாக இருந்ததை, “விசுவாசத்தில் நிகழ்கால பரதன்” என்று ஏன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

’’ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கிவிட்டு மீண்டும் அது திரும்ப பெறப்பட்டதாக வரலாறே இல்லை; அந்த புதிய வரலாறை படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்று ஜெயலலிதா பாராட்டியதை விளம்பரம் செய்ய வேண்டியம் அவசியம் என்ன? என்று கேட்கிறார்கள்.

முதல்வர் சொன்ன விசுவாசமும்  ஓபிஎஸ்சின் சூசகமும்

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதால், காரில் கூட அதிமுக கொடியை கூட கட்டமுடியாதபடி செய்துவிட்டார் சசிகலாவை. ஆனால், தன்னை முதல்வர் ஆக்கியிருந்தால் இப்போது முதல்வர் பதவியை திரும்ப கொடுத்திருப்பேன் என்பதை சூசகமாக சொல்கிறாரா ஓபிஎஸ் என்கிற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுகவில்.

“விசுவாசத்தில் நிகழ்கால பரதன்” என்று தலைப்பு மட்டுமல்லாது, தான் முதல்வர் பதவியை ஜெ. யிடம் திருப்பி கொடுத்ததையும் குறிப்பிட்டு இந்தச் சமயத்தில் விளம்பரம் செய்துள்ளார் ஒபிஎஸ். இது யாருக்கான உள்குத்து என்பது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாதா என்ன! என்று கேட்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் அருணன்.

முதல்வர் சொன்ன விசுவாசமும்  ஓபிஎஸ்சின் சூசகமும்

இப்படி எல்லாம் ஒரு பக்கம் விளம்பரம் செய்துவிட்டு, ’’நமக்குள் இருக்கும் பிரச்சனை அண்ணன் தம்பிகளுக்குள் இருக்கும் பிரச்சனை. அதை பேசி தீர்த்துக்கொள்வோம்’’ என்கிறார் ஓபிஎஸ்

இது போதாது என்று, ‘’நமக்கு இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனை’’ என்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

ஆமாம், அண்ணன் யார்? தம்பி யார்? என்ற பிரச்சனைதானே என்று பலரும் கமெண்ட் அடிக்கிறார்கள்.