கனிமொழியின் டென்ஷன்; திமுகவின் குழப்பம்- பாஜக எழுப்பும் கேள்வி

 

கனிமொழியின் டென்ஷன்;  திமுகவின் குழப்பம்- பாஜக எழுப்பும் கேள்வி

பாஜகவினர் வேல் யாத்திரையை தீவிரமாக முன்னெடுத்து சென்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலுனும் வேல் பிடித்தனர். அவர்கள் வேல் பிடித்து போஸ் கொடுத்தது தேர்தல் நாடகம் என்று பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.

கனிமொழியின் டென்ஷன்;  திமுகவின் குழப்பம்- பாஜக எழுப்பும் கேள்வி

இந்நிலையில் , மதுரையில் இரண்டு நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி எம்.பி., சிம்மக்கல் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, வடக்குமாசி வீதி திமுக வட்ட செயலாளர் பாலு மற்றும் சரவணன் ஆகியோர், வெண்கலத்தால் ஆன வேல் கொண்டு வந்து கனிமொழிடம் கொடுத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத கனிமொழி, டென்சன் ஆனார். ஏதோ அருவருப்பான ஒரு பொருளை கொண்டு வந்து நீட்டுவது போலவே முகத்தை வைத்துக்கொண்டார். கடைசிவரைக்கும் அந்த வேலினை கனிமொழி கையில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

கனிமொழியின் டென்ஷன்;  திமுகவின் குழப்பம்- பாஜக எழுப்பும் கேள்வி

இதுகுறித்து பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ’’திருப்புவனத்தில் இருக்கும் கோயிலுக்கு இந்த வேலினை கொண்டு செல்கிறோம். இடையில் கனிமொழி பிரச்சாரத்திற்கு வந்ததால், அவருடன் பேசியபோது, நாங்கள் அவரிடம் வேல் கொடுக்க முயன்றதாக தவறாக நினைத்துக்கொண்டார்’’ என்று மழுப்பி இருக்கிறார்.

கனிமொழியின் டென்ஷன்;  திமுகவின் குழப்பம்- பாஜக எழுப்பும் கேள்வி

தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’ஸ்டாலினும் உதயநிதியும் வேல் பிடித்தார்கள். கனிமொழியும் ஸ்டாலினும் வேல் பிடித்தும் கனிமொழி வேல் பிடிக்க தயங்கியது திமுகவின் குழப்பம். உதயநிதியும் வேல் பிடித்தது தேர்தல் நாடகம் என்பதை கனிமொழி உனர்த்திவிட்டார். இனியும் திமுகவுக்கு இந்த தேர்தல் நாடகம் வேண்டாம்.

வேல் தூக்குவது என்பது தேர்தல் நாடகமும் அல்ல; வேல் என்பது சினிமா ஷூட்டிங்குக்கு பயன்படுத்தும் பொருளும் அல்ல.’’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.