அடுத்த பிரச்சனைக்கு தாவிய ராமதாஸ்! அந்த விவகாரம் என்னவாயிற்று?

 

அடுத்த பிரச்சனைக்கு தாவிய ராமதாஸ்! அந்த விவகாரம் என்னவாயிற்று?

இத்தனை நாளும் இட ஒதுக்கீட்டு பிரச்சனையை இறுக பிடித்துக்கொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ’’கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ?’’என்று அடுத்த பிரச்சனைக்கு தாவியிருக்கிறார்.

அப்படியென்றால் அந்த பிரச்சனை என்னவாயிற்று? அது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அடுத்த பிரச்சனைக்கு தாவிய ராமதாஸ்! அந்த விவகாரம் என்னவாயிற்று?

தைலாபுரம் தோட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் அதிமுக அமைச்சர்கள் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பாமவின் மூத்த நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘’10.5 சதவிகிதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்ட ஜி.கே.மணி, கடைசியில் 5.5. என்ற நிலைக்கும் இறங்கி வந்த நிலையில், இட ஒதுக்கீடு அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம். முதலில் கூட்டணியை இறுதி செய்துகொள்வோம். அய்யாகிட்ட எத்தனை சீட் வேணும். எவ்வளவு வேணும்?ம்ன் கேட்டு சொல்லுங்க? என்று கே.பி.முனுசாமி சொன்னதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன.

அடுத்த பிரச்சனைக்கு தாவிய ராமதாஸ்! அந்த விவகாரம் என்னவாயிற்று?

ஆனாலும், அதிகாரப்பூர்வமாக அந்த பேச்சுவார்த்தை குறித்து அதிமுகவும், பாமகவும் அறிவிக்காத நிலையில், பேச்சுவார்த்தையில் 700 கோடி பேரம் நடந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்தன.

அதன்பின்னர் அதிமுகவும் சரி, பாமகவும் சரி, அதுகுறித்து எதுவும் பேசாமல் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது. இடையில் சசிகலா தமிழகம் வந்ததால் அந்த பரபரப்பும் பதற்றமுமாக இரண்டு நாட்கள் கடந்து விட்டது.

இந்நிலையில் இன்று ராமதாஸ், ’’கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறுவது எந்நாளோ?’’ என்று டுவிட் போட்டிருக்கிறார்.

அடுத்த பிரச்சனைக்கு தாவிய ராமதாஸ்! அந்த விவகாரம் என்னவாயிற்று?

கச்சத்தீவுக்காக ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்தான். இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு,

ஏன் அந்த விவகாரம் என்னவாயிற்று? இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.