சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா… கஸ்தூரி அடித்த கமெண்ட்

சின்னம்மா கொஞ்சம்  டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா… கஸ்தூரி அடித்த கமெண்ட்

நான்காண்டுகள் சிறை தண்டனை முடிந்து, மேலும் சில நாட்கள் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபட்டு தமிழகம் திரும்பினார் சசிகலா. அவர் சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவிடம் சென்று சபதம் போடுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கையில், அதை நடக்கவிடமல் செய்துவிட்டதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள். பரமாரிப்பு வேலைகள் நடைபெறுகிறது என்று பொதுப்பணித்துறையால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல தடை போடப்பட்டிருக்கிறது.

சின்னம்மா கொஞ்சம்  டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா… கஸ்தூரி அடித்த கமெண்ட்

காரில் அதிமுக கொடி கட்டக்கூடாது என்று தடைபோட்டார்கள். ஆனால், அதிமுக கொடியுடன் தான் சசிகலா பெங்களூரில் இருந்து புறப்பட்டார். தமிழக எல்லையில் காரில் இருந்து கொடி அகற்றப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது. தமிழக எல்லை வரைக்கும் அதிமுக கொடியுடன் வந்தவர். திடீரென்று வேறொரு காருக்கு மாறினார். தான் வந்த காரில் இருந்த அதிமுக கொடியை அகற்ற சொல்லிவிட்டார்.

அடுத்து ஏறிய அந்த காரிலும் அதிமுக கொடி இருந்ததால் எல்லோரும் குழப்பம் அடைந்தனர். ஆனால், இது சசிகலா போட்டு வைத்திருந்த திட்டம் என்பது பின்னர்தான் தெரியவந்தது. சூளகிரியை சேர்ந்த அதிமுக செயலாளர் அந்த காரில் வந்தார். அவர் கார் என்பதால் அவர் அதிமுக பிரமுகர் என்பதால் காரில் இருந்து கொடியை அகற்ற முடியவில்லை போலீசாரால்.

சின்னம்மா கொஞ்சம்  டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா… கஸ்தூரி அடித்த கமெண்ட்

இப்படி நினைத்ததை முடித்து, அதிமுக கொடியுடன், தோளில் அதிமுக துண்டுடன் சென்னைக்குள் வந்தடைந்துவிட்டார் சசிகலா. சசிகலாவின் 23 பயண விபரங்களை ஒளிபரப்ப ஜெயாடிவிக்கு தடை போட்டிருக்கிறார்கள் என்று பேச்சு.

சின்னம்மா கொஞ்சம்  டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா… கஸ்தூரி அடித்த கமெண்ட்

இந்நிலையில், சசிகலாவின் இந்த விவகாரம் குறித்தும், அவருக்கு போடப்பட்ட தடைகள் குறித்தும், ‘’நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!’’என்று தெரிவித்திருக்கிறார்.