சென்னை அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்! வக்கீல் வாக்குவாதம்

சென்னை அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்! வக்கீல் வாக்குவாதம்

அதிமுக கொடியுடன், அதிமுக துண்டு போட்டுக்கொண்டு கெத்தாக சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார் சசிகலா. அதிகாலையில், சென்னை பூந்தமல்லி அடுத்த குயின்ஸ்லாந்து என்ற இடத்தில் கார் வந்தபோது, போலீசார் காரை தடுத்தி நிறுத்தினர். இதனால் பின் தொடந்து வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

சென்னை அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்! வக்கீல் வாக்குவாதம்

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பின்னர் போலீசார் சசிகலா கார் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர்.

சென்னை அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்! வக்கீல் வாக்குவாதம்

இந்த சம்பவத்தினால் குயின்ஸ்லாந்து பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி நேற்று காலை 7 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா 23 கார் பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலையில் சென்னை வந்தடைந்தார். வழியில் எங்கேயும் ஓய்வெடுக்காமல், தொடர்ச்சியாக கார் பயணம் செய்து சென்னை வந்தடைந்தார். தொண்டர்களும் விடிய விடிய சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிகாலை 4 மணிக்கு ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லை வந்தடைந்தார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். எம்.ஜி.ஆரின் தாயார் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.