தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்.பி. பதில்

 

தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்.பி. பதில்

பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றார் கனிமொழி எம்.பி.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியபோது, ’’ஜெயலலி தாவிற்கு பின்னர் சசிகலாவை அம்மா என்றார்கள். இப்போது அவர வேறு மாதிரி பேசுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்.பி. பதில்

சசிகலா இன்று தமிழகம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’அதிமுக – அமமுக இணையாது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது’’ என்றார்.

’’அதிமுகவில் ஸ்லீப்பர் செல் கிடையாது. ஆனால், சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள்.’’என்ற ஜெயகுமார், ‘’திமுகவின் பி டீம் தாம் சசிகலாவும் தினகரனும். திமுகவுக்கும் அமமுகவுக்கும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.’’ என்றார்.

தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்.பி. பதில்


இதுகுறித்து கனிமொழி எம்.பியிடம் மதுரையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் சொன்னதை அவர் மறுத்தார். தினகரனும், சசிகலாவும் திமுகவின் பி டீம் இல்லை என்று மறுத்தார்.

மாறாக, பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றார்.