பரியேறும் பெருமாள் தங்கராசுவின் பரிதாப வாழ்க்கை; உதவ முன்வந்த ஆட்சியர்

 

பரியேறும் பெருமாள் தங்கராசுவின் பரிதாப வாழ்க்கை;  உதவ முன்வந்த ஆட்சியர்

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பரியேறும்பெருமாள்’படம் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றது. அப்படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் கூத்துக்கலைஞர் தங்கராசுவும் தனது நடிப்பாலும், அக்கதையின் கேரக்டராலும் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதனால்தான் அவரின் பரிதாப வாழ்க்கையும் தற்போது அனைவரின் கவனத்திற்கும் வந்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் தங்கராசுவின் பரிதாப வாழ்க்கை;  உதவ முன்வந்த ஆட்சியர்

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை இளங்கோநரில் சிதிலமடைந்த கூரை வீட்டில் மனைவி மகளுடன் வசித்து வருகிறார்.

நாற்பது ஆண்டுகளாக பெண் வேடமிட்டு நடித்து வரும் இந்த கலைஞரின் குடும்ப சூழ்நிலை மோசமாக இருப்பதால், கூத்து தவிர மற்ற நேரங்களில் எலுமிச்சைபழம், பனங்கிழங்கு வியாபாரம் செய்து பிழைத்து வந்தார். கொரோனா கொடுங்காலம் என்பதால் அந்த வியாபாரமும் கைவிட்டு போனது. இதில், சமீபத்தில் பெய்த கனமழையும் வேறு தங்கராசு வீட்டினை சிதைத்துவிட்டது. மின்சார வயதியும் கிடையாது. இதனால் கதவு இல்லாத வீட்டில் டீச்சர் டிரெயினிங் படித்துவிட்டு வீட்டில் இருந்த மகளை வைத்திருக்க பயந்து திருந்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

பரியேறும் பெருமாள் தங்கராசுவின் பரிதாப வாழ்க்கை;  உதவ முன்வந்த ஆட்சியர்

ஒரு வேளை உணவு , பெரும்பாலும் கூழ்தான் தங்கராசுவுக்கும் அவரது அம்னைவி பேச்சிக்கனிக்கும்.

இதை அறிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நெல்லை ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அவர் வீடு கட்டித்தருவதாகவும், தங்கராசுவின் மகளுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.