வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூமழை! ஹெலிகாப்டருக்கு அனுமதி தராததால் ட்ரோன்!

வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூமழை! ஹெலிகாப்டருக்கு அனுமதி தராததால்  ட்ரோன்!

சசிகலா தமிழக எல்லைக்குள் நுழையும்போது வானத்தில் இருந்து அவருக்கு பூ தூவ அமமுகவின் முடிவெடுத்தனர். ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவர் கலெக்டரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், ட்ரோன் மூலமாக வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூ மழை பொழிந்து மகிழ்ந்தனர் தொண்டர்கள்.

வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூமழை! ஹெலிகாப்டருக்கு அனுமதி தராததால்  ட்ரோன்!

சசிகலாவின் தமிழக வருகையை பிரம்மாண்டமாக காட்ட அமமுகவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், காவல்துறையினரின் கட்டுப்பாடுகளால் பிரம்மாண்டத்தை காட்ட முடியாமல் போய்விட்டது.

வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூமழை! ஹெலிகாப்டருக்கு அனுமதி தராததால்  ட்ரோன்!

பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும், கொடி, தோரணங்கள், பேனர்கள், பிளெக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது என்றும், வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததால், 2 ஆயிரம் கார்களில் சசிகலாவை அழைத்து வரவேண்டும் என்ற அமமுகவினின் ஏற்பாடுகள் எல்லாம் குளறுபடியானது. அதே போல, ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவ அனுமதி கேட்டிருந்தார் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. அனுமதி கிடைக்காததால் தொண்டர்கள் அசரவில்லை. ட்ரோன் மூலம் சசிகலாவுக்கு பூ மழை தூவினர்.

வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூமழை! ஹெலிகாப்டருக்கு அனுமதி தராததால்  ட்ரோன்!