கொடியை தொடர்ந்து அதிமுக துண்டு: அசராத சசிகலா

 

கொடியை தொடர்ந்து அதிமுக துண்டு: அசராத சசிகலா

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் தங்கும் விடுதிக்கும் சென்றதால் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிமுக உறுப்பினர் அல்லாத ஒருவர் அதிமுக கொடியை கட்டியதால் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிமுக அமைச்சர்களும் எச்சரித்தனர்.

கொடியை தொடர்ந்து அதிமுக துண்டு: அசராத சசிகலா

இந்நிலையில் இன்று கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருவதால், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரித்திருந்தது. மீறி கொடியை கட்டி வந்தால் காரில் இருந்து கொடி அகற்றப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

ஆனால் , தடையை மீறி அதிமுக கொடி கட்டிய காரில்தான் சசிகலா கர்நாடகாவில் இருந்து புறப்பட்டார். ஏனோ தெரியவில்லை. திடீரென்று தமிழக எல்லைக்கு முன்னாடியே வேறொரு காரில் மாறி பயணித்தார். அது சமயம் போலீசார் சசிகலாவின் காரை திடீர் என்று மறித்தனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

கொடியை தொடர்ந்து அதிமுக துண்டு: அசராத சசிகலா

தடையை மீறி அதிமுக கொடி கட்டியதால் அதை கண்டித்து கிருஷ்ணகிரி காவல்துறை அனுப்பிய நோட்டீசை சசிகாவிடம் கொடுக்க முயன்றபோது, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார்.

கொடி விவகாரம் இப்படி இருக்க, துண்டு விவகாரம் தொடங்கியிருக்கிறது.

ஓசூர் அருகே உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார் சசிகலா. அப்போது தோளில் அதிமுக துண்டு போட்டிருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.