சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

 

சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

ஓசூர் அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்தியது போலீஸ். இதனால் பதற்றம் நிலவியது. அப்போது கிருஷ்ணகிரி போலீசார் ஒரு நோட்டீசை சசிகலாவிடம் கொடுக்க வந்தனர். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த நோட்டீசை வாங்கிக்கொண்டார்.

சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

தடையை மீறி காரில் அதிமுக கொடியுடன் வந்ததால் அதைக்கண்டித்து காவல்துறை அந்த நோட்டீசை கொடுத்தது. ஆனால், காரில் இருந்து அதிமுக கொடியை போலீசார் அகற்றவில்லை.

சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

கர்நாடகாவில் இருந்து சசிகலா இன்று காலையில் புறப்பட்டார். தமிழக எல்லைக்கு முன்னரே தனது காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு, அதே நேரம் இன்னொரு காரில் ஏறி பயணித்தார். அந்த காரில் ஜெயலலிதா படத்துடன் கூடிய அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.

சசிகலா காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

இந்நிலையில், ஓசூர் அருகே சசிகலா காரை தடுத்து நிறுத்தி, தடையை மீறியதற்கான நோட்டீசை வழங்கியது போலீஸ்.

அதிமுக கொடியுடன் வந்தால் காரில் இருந்து கொடி அகற்றப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரித்திருந்த நிலையில், சசிகலாவின் காரை திடீர் என போலீசார் மறித்ததால், அதிமுக கொடியைக் அகற்ற வருகிறார்கள் என்று தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டது.