அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள்.. எத்தனை ஓட்டங்கள்.. சீமான் உருக்கம்

 

அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள்.. எத்தனை ஓட்டங்கள்.. சீமான் உருக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவராக இருந்தவர் அன்பு என்கிற அன்புச்செழியன். நாகை மாவட்டம் எருக்கூர் அருகே தில்லைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அன்பு, சீமானுக்கு கார் டிரைவராக மட்டுமல்லாமல், சகலமுமாக இருந்தவர். கடந்த வரும் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துக்கம் தாளாமல் கதறி அழுத சீமான், இறுதிச்சடங்கில் அன்புவின் உடலை சுமந்து சென்றார்.

அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள்.. எத்தனை ஓட்டங்கள்.. சீமான் உருக்கம்

முதலாமாண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சீமான் அன்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

’’தன் உயிருக்கு மேலாக என்னை நேசித்து என்னிடம் வந்து சேர்ந்த நாள் முதல் தன் வாழ்வின் இறுதிநாள் வரை எனக்காகவே வாழ்ந்த எனது ஆருயிர் தம்பி அன்பு என்கிற அன்புச்செழியனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

அன்புச் செழியன் என்று அவனுக்கு நான் பெயர் வைத்ததில் இருந்து தன்னைப் பெற்ற தாய் தந்தையை விட தான் பெற்ற பிள்ளைகளை விட ஒருபடி மேலாக என் மீது பேரன்பும் பெரும் பற்றுக் கொண்டு வாழ்ந்தவன் தம்பி அன்பு. வெறும் வாகன ஓட்டுநராக மட்டுமல்லாமல் என்னுடைய ஒவ்வொரு தேவையையும் அறிந்து முன்கூட்டியே அவற்றை ஆயத்தப்படுத்தி தானும் ஆயத்தமாகும் வல்லமை வாய்க்கப் பெற்றவன்.

அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள்.. எத்தனை ஓட்டங்கள்.. சீமான் உருக்கம்

கூறாமலே குழந்தைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றும் தாய்க்கு நிகராக செயல்பட்டு எனது குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்தவன் தம்பி அன்பு என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கடந்த 10 ஆண்டுகால இன விடுதலைக்கான தமிழ் தேசிய போராட்ட நீரோட்டத்தில் என்னுடைய வேகத்திற்கு இணையாக அதேசமயம் சூழ்நிலையறிந்து விவேகமாகவும் செயல்பட்டவன்.

அவனுடைய இறப்பு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள் எத்தனை ஓட்டங்கள் நிகழும் தேடினாலும் எதையும் நிரப்ப முடியாத நிரந்தரமான வெறுமையை வாழ்வில் ஒவ்வொரு பயணத்திலும் எனக்குள் ஏற்படுத்தி சென்று விட்டான். அவன் தந்த அளவிட முடியா அன்பின் நினைவுகளோடு இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் அன்புக்கு எனது கண்ணீர் வணக்கத்தை உரித்தாக்கி கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் சீமான்.