அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியில் பிரச்சாரத்தினை தொடங்கி்ய முதல்வர் இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்.

அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

ஆவடி பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர், ’’ஸ்டாலின் சொல்றத நான் செய்றேனா? நான் செய்வதைதான் அவர் சொல்கிறார். விவசாய கடனை ரத்து செய்வதற்காக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா?’’என்றார்.

அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

மேலும், ‘’முதல்வர் குறைகளை பெட்டியில் போடுவதெல்லாம் பழைய காலம், வீட்டிலிருந்தே அரசை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். செல்போன் மூலம் மக்கள் குறைத்தீர்க்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளேன்’’என்று தெரிவி்த்தார்.

அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

எழுவர் விடுதலை விவகாரத்தில் அதிமுக மீது திமுக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ‘’பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாடகம் ஆடுவது திமுகதான். 7பேரும் 28ஆண்டுகளாக சிறையில் இருப்பதற்கு ஒரே காரணம் திமுகதான்’’என்றார் முதல்வர்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வது குறித்து, ‘’மேயராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது
ஸ்டாலின் ஏன் ஊர், ஊராக செல்லவில்லை’’ என கேள்வி எழுப்பினார்.

அவர் துணைமுதல்வராக இருந்தபோது ஏன் இதைச்செய்யல..? முதல்வர் கேள்வி

’’ஆட்சியில் இல்லாததால் கோரப்பசியில் உள்ள திமுகவினரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’என்றும் எச்சரித்தார்.