உதயநிதிக்கு அதை கொடுத்தது மிகப்பெரிய கேலிக்கூத்து… காயத்ரி ரகுராம்

உதயநிதிக்கு அதை கொடுத்தது மிகப்பெரிய கேலிக்கூத்து… காயத்ரி ரகுராம்

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகிறார். அதன்படி காஞ்சிபுரம் – டி.கே நம்பி சாலையில் நெசவாளர்கள், மாணவர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார்.

உதயநிதிக்கு அதை கொடுத்தது மிகப்பெரிய கேலிக்கூத்து… காயத்ரி ரகுராம்

நெசவாளர்கள் நிறைந்த காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நெசவாளர் வெங்கடேசன் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார். அடிமை அரசால் நலிந்து வரும் நெசவாளர் வாழ்க்கை குறித்து கவலை தெரிவித்தனர். கழக அரசில் குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார் . காஞ்சிபுரம்-தேரடியில் சிறப்பான வரவேற்பை தந்த கழக தோழர்கள்- பொதுமக்களுக்கு நன்றி. ‘புதிய பேருந்து நிலையம், பட்டு பூங்கா, மருத்துவக்கல்லூரி… இப்படி காஞ்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை புறக்கணித்த அடிமைகளுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்’ என பேசினார் உதயநிதி.

உதயநிதிக்கு அதை கொடுத்தது மிகப்பெரிய கேலிக்கூத்து… காயத்ரி ரகுராம்

பிரச்சாரத்தின் போது உதயநிதிக்கு கட்சியினர் பரிசுகளை கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் சார்பாக உதயநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் புத்தர் சீலை குறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்,

உதயநிதிக்கு அதை கொடுத்தது மிகப்பெரிய கேலிக்கூத்து… காயத்ரி ரகுராம்

’’அதிகாரத்தை மட்டுமே இலக்காக வைத்து தன்னை விட வல்லமை பெற்ற பலரையும் ஒதுக்கி விட்டு நெஞ்சம் நிறைய முதல்வர் பதவி மீது தீராத ஆசையும் கட்சியையும் நாட்டையும் கைப்பற்றி ஏழை எளிய மக்களை சுரண்ட நினைக்கும் இவருக்கு, அரசாட்சியை துறந்து தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் புத்தரின் சிலையை பரிசாக வழங்குவது ஜனநாயகத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து’’ என்கிறார்.