ஆணிமுட்கள் பதித்தவர்களின் புத்தியில் உறைக்கும்படி பூஞ்செடி பதித்த வேளாண் குடிகள்!

ஆணிமுட்கள்  பதித்தவர்களின் புத்தியில் உறைக்கும்படி   பூஞ்செடி பதித்த வேளாண் குடிகள்!

இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் குடியரசுதினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டம் திசை திருப்பப்பட்டது.

ஆணிமுட்கள்  பதித்தவர்களின் புத்தியில் உறைக்கும்படி   பூஞ்செடி பதித்த வேளாண் குடிகள்!

ஆனால், விவசாயிகள் போராட்ட முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. காசிப்பூர், திக்ரி, சிங்கு எல்லைகளில் குவிந்துள்ளனர். அவர்களை டெல்லிக்குள் விடாமல் தடுப்பதற்காக நடுரோட்டில் ஆணிகளை பதித்துள்ளனர். கம்பி வேலிகளை அமைத்துள்ளனர் போலீசார்.

இதற்கு உலகமெங்கிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நடுரோட்டில் பதித்த ஆணிகளை போலீசார் புடுங்கி வருகிறார்கள்.

ஆணிமுட்கள்  பதித்தவர்களின் புத்தியில் உறைக்கும்படி   பூஞ்செடி பதித்த வேளாண் குடிகள்!

இந்நிலையில், காஸிப்புர் எல்லையில் விவசாயிகளை தடுக்க சாலைகளில் போலீசார் இரும்பு ஆணிகளை பதித்துள்ள நிலையில், அதன் அருகிலேயே பூச்செடிகளை நட்டு பதில் கொடுத்துள்ளனர் விவசாயிகள்.

இதுகுறித்து திருமாவளவன் எம்.பி., ‘’அமைதி வழியில் போராடும் குடிமக்களுக்கு எதிராக தில்லி எல்லையோரங்களில் தடுப்பு அரண்கள் மற்றும் ஆணிமுட்கள் பதிக்கிறது மோடி அரசு. ஆதிக்க வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்குப் புத்தியில் உறைக்கும்படி பூஞ்செடி பதிக்கின்றனர் பொதுமக்களான வேளாண் குடிகள். உழைப்போருக்கு ஆக்கமே சிந்தனை’’ என்று கூறியுள்ளார்.