ராமதாஸ் நிலையை பார்த்து கண்ணீர்விடும் மூத்த நிர்வாகிகள்

 

ராமதாஸ் நிலையை பார்த்து  கண்ணீர்விடும் மூத்த நிர்வாகிகள்

தருமபுரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி சற்று முன் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினார். நானும் என்னப்பா? என்று கேட்டேன்.
‘‘ அய்யா… நாங்களெல்லாம் இந்தியாவின் இரும்பு மனிதர் மருத்துவர் அய்யா வாழ்க என்று அப்போது முழக்கமிடுவோம். ஆனால், இப்போது உங்கள் டுவிட்டர் பதிவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். -ராமதாசின் தற்போதைய பரபரப்பு டுவிட்டர் பதிவு இது.

ராமதாஸ் நிலையை பார்த்து  கண்ணீர்விடும் மூத்த நிர்வாகிகள்

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக 6 கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறது. போராட்டங்களுக்கு இடையில் அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறது. இதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிமுகவும் பாமகவும் அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்றைக்கு பாமக நிறுவர் ராமதாஸ் விதியே விதியே என்செய நினைத்தாய் வன்னிய சாதியை எனக்குரை யாயோ? என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ராமதாஸ் நிலையை பார்த்து  கண்ணீர்விடும் மூத்த நிர்வாகிகள்

பேச்சுவாத்தையில் சுமுகம் ஏற்பட்டு நேற்று ராமதாஸ் முதல்வரை சந்திக்கிறார் என்று தகவல் வந்தது. ஆனால் இந்த சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில் இன்றைக்கு இந்த விரக்தியினை வெளிப்படுத்தி இருந்தார் ராமதாஸ்.

இதன்பின்னர், தருமபுரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி சற்று முன் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினார். நானும் என்னப்பா? என்று கேட்டேன்.
‘‘ அய்யா… நாங்களெல்லாம் இந்தியாவின் இரும்பு மனிதர் மருத்துவர் அய்யா வாழ்க என்று அப்போது முழக்கமிடுவோம். ஆனால், இப்போது உங்கள் டுவிட்டர் பதிவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்” என்றார் அவர் என்கிற பதிவின் மூலம் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.