ஆளுநரின் நிராகரிப்பு – கொந்தளிக்கும் நீதிபதி கே.டி.தாமஸ்

 

ஆளுநரின் நிராகரிப்பு –  கொந்தளிக்கும் நீதிபதி கே.டி.தாமஸ்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை, தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநரின் நடவடிக்கையினால், உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கில் தீர்ப்பளித்த மூவர் அமர்வின் தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் ஆளுநரின் நிலைப்பாடு குறித்து கொந்தளித்திருக்கிறார்.

ஆளுநரின் நிராகரிப்பு –  கொந்தளிக்கும் நீதிபதி கே.டி.தாமஸ்

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவரான கே.டி.தாமஸ், ராஜீவ்காந்தி கொலை வழக்கின் புலன்விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.

தடா சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளனிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் அவரை தண்டிப்பது தவறு என்று தாம் வாதிட்டதாகவும், மற்ற இரு நீதிபதிகளின் கருத்து பெரும்பான்மையாக இருந்ததால் அதற்கு உடன்பட வேண்டியதாகிவிட்டதாகவும் நீதியரசர் கே.டி.தாமஸ் கூறியிருந்தார். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதுகுறித்து சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநரின் நிராகரிப்பு –  கொந்தளிக்கும் நீதிபதி கே.டி.தாமஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைத்தது. ஆனால் அவர் அதுகுறித்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுப்பார் என மத்திய அரசின் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் விடுதலை தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் வழக்கை 2 வாரம் தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்.

ஆளுநரின் நிராகரிப்பு –  கொந்தளிக்கும் நீதிபதி கே.டி.தாமஸ்

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ள தகவலில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன். ஆனால் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவருக்கு தான் அந்த அதிகாரம் உண்டு. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநரின் நடவடிக்கையினால், உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கில் தீர்ப்பளித்த மூவர் அமர்வின் தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் ஆளுநரின் நிலைப்பாடு குறித்து கொந்தளித்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அற்புதம் அம்மாள்.