ஹெலிகாப்டரில் இருந்து சசிகலாவுக்கு பூக்கள் தூவ ஏற்பாடு

ஹெலிகாப்டரில் இருந்து சசிகலாவுக்கு பூக்கள் தூவ ஏற்பாடு

பெங்களூருவில் இருந்து சசிகலா வரும் 7ம் தேதி வருகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த அந்த அறிவிப்பில் மாற்றம் செய்து, 8ம்தேதி தமிழகம் வருகிறார் என்று அறிவித்திருக்கிறார்.

ஹெலிகாப்டரில் இருந்து சசிகலாவுக்கு பூக்கள் தூவ ஏற்பாடு

கர்நாடகா எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகா – ஓசூர் – ஆம்பூர்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரும் சசிகலாவுக்கு வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கெல்லாம் மேலாக, சசிகலா தமிழக எல்லையில் கால் வைக்கும்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டிருக்கிறார் அமமுக அமைப்புச்செயலாளர் ஜி.ஜெயந்தி பத்மநாபன்.

ஹெலிகாப்டரில் இருந்து சசிகலாவுக்கு பூக்கள் தூவ ஏற்பாடு

‘’அதிமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய சின்னம்மா பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வருவதை முன்னிட்டு அவர்களுக்கு அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்க உள்ளேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஹெலிகாப்டரில் இருந்து சசிகலாவுக்கு பூக்கள் தூவ ஏற்பாடு