சச்சின் இந்தியாவின் வரமல்ல,சாபம்… காங்., எம்.பி. கோபம்

 

சச்சின் இந்தியாவின் வரமல்ல,சாபம்… காங்., எம்.பி. கோபம்

விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம் என்று சொல்லியிருக்கும் ஜோதிமணி எம்.பியின் வார்த்தைகளில் கோபம் தெறிக்கிறது. அவர் மேலும், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம். அம்பானி,அடக்குமுறை அரசின் அடிமைகள் என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.

சச்சின் இந்தியாவின் வரமல்ல,சாபம்… காங்., எம்.பி. கோபம்

தனது இந்த டுவிட்டர் பதிவினை சச்சின் டெண்டுல்கருக்கும் ஷேர் செய்திருக்கிறார் அவர்.

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர், ரவிசாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், லதா மங்கேஸ்கர், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

சச்சின் இந்தியாவின் வரமல்ல,சாபம்… காங்., எம்.பி. கோபம்

வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு எதிராக சச்சினின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சச்சின் இந்தியாவின் வரம் என்றும், கிரிக்கெட் கடவுளாகவும் பார்க்கப்பட்டு வந்த நிலையில், தேவையில்லாமல் அரசியல் விவகாரங்களுக்குள் இறங்கியதன் விளைவாக மீம்ஸ்களால் வறுத்தெடுக்கப்படுகிறார் சச்சின்.

’’வெளிப்புற சக்திகள் பார்வையாளராகத்தான் இருக்க வேண்டும் எனும் சச்சினுடைய பார்வை என்ன இந்திய விவசாயிகள் விஷயத்தில்? இவர் இந்தியர்தானே?’’ என்று கேட்கிறார் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அருணன்.

சச்சின் இந்தியாவின் வரமல்ல,சாபம்… காங்., எம்.பி. கோபம்

இந்நிலையில், விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம் என்று சொல்லியிருக்கும் ஜோதிமணி எம்.பியின் வார்த்தைகளில் கோபம் தெறிக்கிறது. அவர் மேலும், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம். அம்பானி,அடக்குமுறை அரசின் அடிமைகள் என்றும் சச்சினை கடுமையாக சாடியிருக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.