கே.பி.ராமகிருஷ்ணன் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்… முதல்வர்

 

கே.பி.ராமகிருஷ்ணன்  காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்… முதல்வர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன், மாடியில் இருந்து தவறி விழுந்தது சுயநினைவின்றி மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கே.பி.ராமகிருஷ்ணன்  காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்… முதல்வர்

’’புரட்சித்தலைவர் MGR அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’’ என்று முதல்வர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

கே.பி.ராமகிருஷ்ணன்  காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்… முதல்வர்

எம்ஜிஆர் நடித்த படங்களில் சண்டைக்காட்சிகளில் எம்ஜிஆருடன் நடித்து மிகவும் பிரபலமானவர் ராமகிருஷ்ணன். எம்ஜிஆரின் பல படங்களில் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் டூப் போட்டவர் ராமகிருஷ்ணன். அவரையே தனது மெய்க்காப்பாளராக வைத்துக்கொண்டார் எம்ஜிஆர். பின்னாளில் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராக இருந்தார் ராமகிருஷ்ணன்.

சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்த ராமகிருஷ்ணன் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டு மூளையில் ரத்தக் கட்டி உண்டாகி சுயநினைவை இழந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த 1 ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

தொடர் சிகிச்சை அளித்தும் கே. பி. ராமகிருஷ்ணன் சுய நினைவு திரும்பாமலேயே இருந்தார். சுய நினைவு திரும்பாத நிலையிலேயே நேற்று அவர் மரணமடைந்தார். கே.பி. ராமகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.