பாஜக மேலிட பொறுப்பாளர் நியமனத்துக்கு பின்னால் இவ்வளவு கணக்குகளா ?

 

பாஜக மேலிட பொறுப்பாளர் நியமனத்துக்கு பின்னால் இவ்வளவு கணக்குகளா ?

தேசிய கட்சிகள் மாநிலங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மேலிட பார்வையாளர்கள், பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கமானது. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு மாநில நிர்வாகிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வழங்கும். மாநில நிர்வாகிகள் வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என பார்ப்பதுதான் அவர்களது வேலையாக இருக்கும்.

பாஜக மேலிட பொறுப்பாளர் நியமனத்துக்கு பின்னால் இவ்வளவு கணக்குகளா ?

தற்போது தமிழகம் புதுவை மாநிலங்களுக்கு பாஜக நியமித்துள்ள மேலிட பொறுப்பாளர்கள் குறித்து எதிர் கட்சிகள் கூடுதல் கவனம் பெற்றுள்ள்னா. குறிப்பாக தமிழகத்தில் மேலிட பார்வையாளராக சிடி ரவி நியமிக்கப்பட்டு, மாநில நிர்வாகிகளை வேலை வாங்கி வந்தார். இந்த நிலையில் புதிதாக இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி நியமிக்கப்பட்டுள்ள ஆந்திராவைச் சேர்ந்த கிஷன் ரெட்டி, உள்துறை இணை அமைச்சராக உள்ளார். அவர் தவிர, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை இணை அமைச்சகமும், ராணுவ செல்வாக்கு கொண்ட நபரும் தமிழகத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவது மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக கவனிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பாஜக மேலிட பொறுப்பாளர் நியமனத்துக்கு பின்னால் இவ்வளவு கணக்குகளா ?
வி.கே.சிங்

பல மாநில தேர்தலில் பாஜக காட்டும் அதிரடி என்பது முழுக்க முழுக்க அதிகார பலத்தை வைத்துதான். மக்கள் செல்வாக்கு இல்லையென்றாலும், மத்திய அரசின் அதிகார பலத்தை வைத்துதான் மாநில அரசியல் போக்குகளை மாற்றி வருகிறது. அப்படி தமிழ்நாட்டு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்ற பாஜக வகுத்து வரும் வியூகங்களில் ஒன்றுதான் அமைச்சர்களை மேலிட பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளது.

தேர்தல் பணிகளை பொறுத்தவரை மத்திய தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாதுகாப்பு பணிகள் அனைத்தும் உள்துறை அமைச்சகம்தான் வழங்கும். தமிழக காவல்துறைகூட தனது அதிகாரத்தை செலுத்த முடியாது. அந்த வகையில்,உள்துறை இணை அமைச்சரே தேர்தல் களத்தில் நிற்கும்போது பாஜக அணிகள் மிக துணிச்சலாக தேர்தல் வேலைகளில் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

பாஜக மேலிட பொறுப்பாளர் நியமனத்துக்கு பின்னால் இவ்வளவு கணக்குகளா ?

கடந்த நில மாதங்களில் மட்டும் தமிழக பாஜகவில் குற்றவழக்குகளில் தொடர்புடைய பலநூறு பேர் பொறுப்பாளர்களாக சேர்ந்துள்ளனர். இப்படி பலருக்கு அரசியல் தஞ்சம் அளித்துவரும் கட்சியாக பாஜக உள்ளதை எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. எனவே தேர்தல் களத்தில், பல இடங்களில் பாஜக – இதர கட்சிகள் மோதம் உருவாகும் சூழல் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள். இவற்றை சமாளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய காவல் படைக்கு உள்ளது கவனிக்கத்தக்கது. இப்படியாக பலவற்றுடனும் முடிச்சுபோட்டு, மத்திய பாதுக்காப்பு படையை கவனித்த, கவனித்துக் கொண்டிருப்பவர்களை பாஜக தமிழக பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது என்கின்றனர்.

தேர்தலில் பல கணக்குகள் வெற்றியை தீர்மானிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரு தொகுதியில்கூட தனியாக வெற்றிபெற முடியாத ஒரு கட்சி, 60 தொகுதிகளில் தனித்து வெற்றிபெறுவோம் என நம்பிக்கையோடு சொல்வது சும்மாவா ? எல்லாம் ஒரு கணக்குதான் என்பது இதனால்தானோ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.