அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை… என்ன நடந்தது.. ராமதாஸ் ஆவேசம்

 

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை… என்ன நடந்தது.. ராமதாஸ் ஆவேசம்

தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் ராமதாசுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று சென்னையில் அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை… என்ன நடந்தது.. ராமதாஸ் ஆவேசம்
ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித ஒட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

’’சட்டத்திற்காக மக்களா …. மக்களுக்காகச் சட்டமா? மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல… அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன!’’என்று ஆவேசக்கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வன்னியர்களுக்கு இருபது சதவிகித ஒட ஒதுக்கிடு கேட்டு பாமக சார்பில் கடந்த இரண்டுமாதங்களில் 6 கட்டபோராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக அதிமுக அமைச்சர்களுடனும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் அதிமுக அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராமதாஸ் இப்படி பதிவிட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.