வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி

 

வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி

ஒரு காலத்தில் பலமிக்க அணியாக சித்தரிக்கப்பட்ட திமுக கூட்டணி தற்போது நொறுங்கும் நிலையில் உள்ளது. காங்கிரசை தொடர்ந்து மற்ற கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகுவது பற்றி பரிசீலித்து வருவதால் திமுக தனித்து விடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி

கடந்த எம்.பி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோடி எதிர்ப்பும், வகைதொகையில்லாமல் அள்ளியிறைக்கப்பட்ட போலி வாக்குறுதிகளுமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள். ஆனால் ஏதோ தங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என திமுகவின் தலைமை எண்ணியது. இந்த எண்ணத்திற்கு திமுக தேர்தல் ஆலோசகரான ஐபேக்கும் தூபம் போட்டது. இதன் விளைவாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடம் ரொம்பவே கறார் காட்டி வருகிறது திமுக.

வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி

காங்கிரசுக்கு அதிகபட்சம் 18 சீட்டுகள் என்பதுதான் திமுகவின் இப்போதைய நிலைப்பாடு. ராகுல் வரை இந்த தகவல் தெரிந்து அவரும், மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால்தான் தனது சமீபத்திய தமிழக விசிட்டின்போது ராகுல் திமுக தரப்பை சந்திக்க ஆர்வம் காட்டவில்லையாம். அதுபோலவே இம்மாத மத்தியில் நிகழவிருக்கும் தென்மாவட்ட விசிட்டின்போதும் அவர் திமுகவினரை சந்திக்கும் திட்டம் இல்லை.

இது நம்மிடம் பேசிய கொங்குமண்டலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி, ‘’ திமுக இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு அப்போதைய அரசியல் சூழ்நிலைகளும், தோல்விகளுக்கு அந்தக் கட்சியின் இறுமாப்புமே காரணம். தமிழகத்தில் எத்தனை கட்சிகள் புதிதாக தோன்றினாலும் காங்கிரசுக்கென்று பரவலாக இன்னமும் செல்வாக்கு உள்ளது. அதிலும் தென் மாவட்டங்களில் காங்கிரஸ் வலுவோடு இருக்கிறது. அடிப்படையான இந்த உண்மையை உணர்ந்துகொள்ளாமல் காங்கிரசை வேண்டாத சுமையாகக் கருதுவது திமுகவிற்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தும்’’என்கிறார்.

வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி

மேலும், ‘’கடந்த எம்.பி தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ தங்களது சொந்த செல்வாக்கினால்தான் வெற்றி கிடைத்ததாக திமுக கருதினால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. கூட்டணி கட்சிகளை கிள்ளுக்கீரையாக நடத்தும் திமுகவின் போக்கால் பிற கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இந்த அதிருப்தி சரியான நேரத்தில் வெடிக்கும்.

வெளியேறும் காங்கிரஸ்- நொறுங்கும் திமுக கூட்டணி


எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் திமுகவுடன் கூட்டணி தொடர வாய்ப்பு குறைவு. எனவே மாற்று ஏற்பாடுகளில் நாங்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. அரசியலில் அகந்தையால் அழிந்துபோன கட்சிகள் அநேகம் உண்டு. அந்த பட்டியலில் திமுகவும் இடம்பெறுவதை நாளைய வரலாறு சொல்லும்’’என்கிறார் உறுதியாக.