இதையே கையாள முடியல… அதை எப்படி? பாஜகவுக்கு கஸ்தூரி கேள்வி

 

இதையே கையாள முடியல… அதை எப்படி? பாஜகவுக்கு கஸ்தூரி கேள்வி

இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் திசைமாறிவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், தேசிய அளவில் இருந்த போராட்டம் இன்றைக்கு சர்வதேச அளவில் பேசப்படும் விசயமாகிவிட்டது.

ஹாலிவுட் நடிகை ரிஹானா குரல் கொடுத்த பின்னர் உலக அளவில் விவசாயிகள் போராட்டம் கவனம் பெற்றது. சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மேலும் வலு சேர்த்துள்ளார்.

இதையே கையாள முடியல… அதை எப்படி? பாஜகவுக்கு கஸ்தூரி கேள்வி

இந்நிலையில் வரும் 6ம் தேதி விவசாயிகள் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். நாடெங்கிலும் இந்த மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் டெல்லியில் கூடுவதை தவிர்க்க, முள்வேலி, கூர்மையான இரும்பு வேலி, கான்கிரீட் தடுப்புகள் டெல்லியைச் சுற்றி அமைக்கப்படுகின்றன. இதற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையே கையாள முடியல… அதை எப்படி? பாஜகவுக்கு கஸ்தூரி கேள்வி

இதுகுறித்து நடிகை கஸ்தூரி, ‘’டெல்லியில் நடைப்பெற்றும் வரும் விவசாயிகளுக்கு சர்வதேச ஆதரவு பெருகி வருகிறது. விவசாய போராட்டங்களை தடுக்க அமைக்கப்படும் சுவர்கள் மக்களை தடுக்கக்கூடும். ஆனால், சர்வதேச அளவில் விவசாயிகளூக்கு ஆதரவாக எழும் குரல்களை தடுக்கமுடியுமா என்ன?’’என்று கேட்கிறார்.

மேலும், ’’சொந்த நாட்டுக்குள் இருக்கும் ஆர்ப்பாட்டங்களை நியாயமாகவும், விரைவாகவும் பேசி கையாள முடியாதபோது, சர்வதேச பிரச்சினைகளில் இந்தியா எவ்வாறு மனித உரிமைகளை ஆதரிக்க முடியும்? ’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.