கிரேட்டா தன்பெர்க் ஆதரவு; பாஜகவுக்கு மேலும் நெருக்கடி

 

கிரேட்டா தன்பெர்க் ஆதரவு;  பாஜகவுக்கு மேலும் நெருக்கடி

டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றிருந்தது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகை ரிஹானா குரல் கொடுத்த பின்னர் உலக அளவில் விவசாயிகள் போராட்டம் கவனம் பெற்றது.

கிரேட்டா தன்பெர்க் ஆதரவு;  பாஜகவுக்கு மேலும் நெருக்கடி

அவர் ஆதரவு தெரிவித்ததோடு அல்லாமல், ஏன் இந்தியாவைத் தவிர உலகளவில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பப்படவில்லை என்றும் கேட்டிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருவது பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.