ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.. ஸ்டாலின்

 

ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.. ஸ்டாலின்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 2021 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.. ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. ஆளுநர் உரையை மட்டுமல்ல கூட்டத்தொடர் மொத்தத்தையும் திமுக புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது என்று ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது உண்மையானது என்னவென்றால், ’இதுதான் கடைசி பட்ஜெட்’ என்று ஆளுநர் சொன்னார். அதுதான் எனக்குப்பிடித்தது என்றார் ஸ்டாலின் .

ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.. ஸ்டாலின்

மேலும் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஆளுநரை சந்தித்து அதிமுக அரசின் மீது முதலமைச்சர் உள்ளிட்ட துணை அமைச்சர் மீதும் அமைச்சர்கள் மீதும் இருக்கும் ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தோம். ஆனால் இதுவரையிலும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநரை பொறுத்தவரையில் முதலமைச்சருக்கு அமைச்சர்களுக்கு பக்கபலமாக ஊழலுக்கு துணை நிற்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அதனால்தான் ஆளுநர் உரையை திமுக புறக்கணிப்பு செய்தது.

ஆளுநர் பேசியதிலேயே எனக்கு பிடித்தது இதுதான்.. ஸ்டாலின்

அதுமட்டுமல்லாமல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதை சமர்ப்பித்து இதுவரையிலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலை செய்வதற்கான சூழலையும் ஆளுநர் உருவாக்கவில்லை. இதை கண்டித்து தான் நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணிப்பு செய்தோம் என்றார்.