தேர்தலில் போட்டியிட விரும்பும் ராதிகா – எந்த தொகுதியை குறிவைக்கிறார் ?

 

தேர்தலில் போட்டியிட விரும்பும் ராதிகா  – எந்த தொகுதியை குறிவைக்கிறார் ?

ஓய்வு காலத்துக்கு பின், கோயில் குளம் என சுற்றுவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் அரசியல் ஆசை வந்து விடுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் அடுத்து தற்போது ராதிகாவுக்கும் அந்த ஆசை வந்து விட்டது. ஏற்கெனவே திமுகவுடன் நெருக்கமாக இருந்தவர்தான் ராதிகா. பல தேர்தல்களில் திமுகவுக்கு பிரச்சாரமும் செய்துள்ளார். அதன் பின்னர், சரத்குமார் தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவருக்கு தற்போது மீண்டும் அரசியல் ஆசை வந்துள்ளது. அதுவும் மகளிரணி தலைவியாக தமிழகம் முழுவதும் வலம் வர ஆசை வந்துவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் ராதிகா  – எந்த தொகுதியை குறிவைக்கிறார் ?

வரும் தேர்தலில் புதிய கட்சிகளே போருக்கு புறப்படுகையில், சமத்துவ மக்கள் கட்சி படை என்ன சும்மாவா என களம் இறங்கிவிட்டார். சினிமா வாய்ப்புகள் குறையும் நிலையில், சின்னத் திரைக்குச் சென்று அங்கு தனக்கான மார்க்கெட்டை நிறுவியர். ஆனால்,தற்போது அங்கும் ராதிகாவுக்கு மார்க்கெட் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சீரியல்களை முழுமையாக குறைத்துக் கொண்டு அரசியலுக்கு முழு நேரமாக வர முடிவு செய்துவிட்டார்.

அதிலும் இந்த முறை சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி தலைவியாக மேடைகளில் கையசைக்கப் போகிறார். தேர்தலில் நிற்பதற்கும் திட்டம் வைத்துள்ளார். தற்போது சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தாலும், பெரிதாக கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளனர். அதனால் கட்சியை வலுப்படுத்தும் விதமாக சரத்குமாரும், ராதிகாவும் மண்டல வாரியாக நிர்வாகிகளை சந்தித்துப் வருகின்றனர். எப்படியும் இந்த முறை 2 சீட்டாவது கேட்பதற்கு கட்சி வலுவாக உள்ளதாக காட்ட வேண்டும். இந்த முறை சரத்குமாரும், ராதிகாவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் ராதிகா  – எந்த தொகுதியை குறிவைக்கிறார் ?

கூட்டணி அமையவில்லை என்றால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்றும் ராதிகா கூறி வருகிறார். ஆனால், அத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று தெரிந்தும், கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்டிக் கொள்வதற்கான அந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார். செல்வாக்கு உள்ள தொகுதிகளை அளித்து கூட்டணிக்குள் இழுக்க அதிமுக- திமுகவிடமிடமிருந்து அழைப்பு வரலாம் என்பதற்காக அதுபோன்ற அறிவிப்புகளை சமத்துவ மக்கள் கட்சி வெளியிடுகிறது. ஆனால் திமுக, தூத்துக்குடி பகுதியில் செல்வாக்கை நிரூபித்துள்ளதால், சமத்துவ மக்கள் கட்சியை இழுப்பதற்கு வாய்ப்பில்லை. அதிமுகவை நெருக்குவதற்கு இந்த அறிவிப்பு பயன்படும் என அரசியல் செய்து வருகிறது சமத்துவ மக்கள் கட்சி.

அரசியல் ஆசை வந்தால் அறிவிப்புகளுக்கா பஞ்சம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி தலைவியை 234 தொகுதிகளிலும் பார்க்கப் போகிறார்களா ? அல்லது 2 தொகுதி மக்கள் மட்டும் பார்க்கப்போகிறார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.