சாலை விதிமீறல் – திண்டுக்கல்லில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு!

 

சாலை விதிமீறல் – திண்டுக்கல்லில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு!

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது, போலீசார் 2 ஆயிரத்து 100 வழக்குகள் பதிவுசெய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது, சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர். அதன்படி, அதிகபட்சமாக தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 826 வழக்குகளும், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 681 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

சாலை விதிமீறல் – திண்டுக்கல்லில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு!

இதற்கு அடுத்தபடியாக, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 199 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 188 வழக்குகளும் பதிவுசெய்தனர்.

இதேபோல், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 119 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 67 வழக்குகளும், அதிவேகத்தில் சென்றதற்காக 16 வழக்குகளும் மற்றும் அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி சென்றதற்காக 4 வழக்குகளும் பதிவு செய்தனர்.