“மில்லியன் பேர் பார்த்தாங்கன்னு அள்ளி விட்டோம் ” -ஊடக கணக்கு ஊழலில் வாலிபரால் வெளியான ரகசியம்

 

“மில்லியன் பேர் பார்த்தாங்கன்னு அள்ளி விட்டோம் ” -ஊடக கணக்கு ஊழலில்  வாலிபரால் வெளியான ரகசியம்

சமூக ஊடகத்தில் போலியான பின் தொடர்பவர்களை உருவாக்கி பலரை ஏமாற்றிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது முதல் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இப்போது 21 வயது விஜய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிருத்விராஜ் நகரைச் சேர்ந்த 21 வயது விஜய் சுரேந்திர பாந்தியா என்பவர்
இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலியான பின்தொடர்பவர்கள், வியூவ்ஸ் , சந்தாதாரர்கள், லைக்ஸ் போன்றவற்றை போலியாக வழங்கும் பல இணையதளங்களை இயக்குகிறார்.இதன் மூலம் அவர் 9000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் சமூக ஊடக கணக்குக்கு போலியாக வியூவ்ஸ்களை வழங்கி பல லட்சங்கள் சம்பாதித்துள்ளதாக மும்பை போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .
ஊடக கணக்கு மோசடி தொடர்பான விஷயங்களை விசாரிக்க மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் மேற்பார்வையில் செயல்படும் எஸ்.ஐ.டி.போலீஸ் அமைப்பு இந்த ஊழல் பற்றி விசாரித்து வருகிறது
அவர்களின் விசாரணையில் இதுபோன்ற ஊடக போலி பின்தொடர்பவர்கள் / வியூவ்ஸ் / லைக்ஸ் வழங்குவதில் ஈடுபட்டுள்ள 79 போர்ட்டல்களை எஸ்ஐடி இதுவரை அடையாளம் கண்டுள்ளது. ரேடரின் கீழ் இருந்த பல போர்ட்டல்கள் மூலம் விஜய் என்ற 21 வயது நபர் செயல்பட்டு வந்துள்ளதாகவும் ,அவர் இதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்துள்ளதாகவும் அவரின் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறினார்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்காவது நபர் இந்த விஜய் என்று மேலும் அவர்கள் கூறினார்கள்.மேலும் இந்த வழக்கில் விரைவில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

“மில்லியன் பேர் பார்த்தாங்கன்னு அள்ளி விட்டோம் ” -ஊடக கணக்கு ஊழலில்  வாலிபரால் வெளியான ரகசியம்